(Source: ECI | ABP NEWS)
இந்தியாவின் நம்பர் 1 இடத்தை பிடித்த கலாநிதி மாறன்..அடேங்கப்பா இத்தனை ஆயிரம் கோடி சொத்து மதிப்பா!
Top 10 Indian Film Producers : இந்திய சினிமாவில் அதிக சொத்து மதிப்புக் கொண்ட டாப் 10 தயாரிப்பாளர்கள் யார் என்பதைப் பார்க்கலாம்

டாப் 10 திரைப்பட தயாரிப்பாளர்களின் சொத்து மதிப்பு
இந்திய சினிமாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் திரைப்படங்களின் பட்ஜெட் உயர்ந்துகொண்டே தான் போகிறது. ஒரு ஸ்டார் நடிக்கும் படத்தின் குறைந்தபட்ச பட்ஜெட் 100 கோடியை தொடுகிறது. அந்த வகையில் இந்திய சினிமாவில் டாப் 10 தயாரிப்பாளர்களும் அவர்களின் சொத்துமதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் முதலிடத்தை சன் பிக்ச்சர்ஸ் உரிமையாளர் கலாநிதி மாறன் பிடித்துள்ளார்.
சன் பிக்ச்சர்ஸ் - கலாநிதி மாறன் சொத்து மதிப்பு
தற்போதைய நிலைப்படி சன் பிக்ச்சர்ஸ் உரிமையாளர் கலாநிதி மாறன் தான் இந்திய சினிமாவில் நம்பர் 1 தயாரிப்பாளர். இவருக்கு சொந்தமான சன் நெட்வர்க்கின் கீழ் மொத்தம் 37 சேனல்கள் இயங்கி வருகின்றன. இதுதவிர சன்ரைஸர்கள் ஹைதராபாத் அணியும் சன் பிக்ச்சர்ஸ்க்கு சொந்தமானது. எந்திரன் , பேட்ட , ஜெயிலர் என பல்வேறு வேற்றிப்படங்களை தயாரித்துள்ளது சன் பிக்க்சர்ஸ் . தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி ரஜினி நடித்துள்ள கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய இரு படங்களை தயாரித்து வருகிறது. கலாநிதி மாறனின் மொத்த சொத்து மதிப்பு ரூ 33 ஆயிரத்து 400 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் இடம்பிடித்த மற்ற தயாரிப்பாளர்களின் சொத்து மதிப்பு குறித்த விபரங்கள் கீழ்வருமாறு
டாப் 10 தயாரிப்பாளர்களின் சொத்து மதிப்பு
கலாநிதி மாறன் - 33,400 கோடி
ரோனி ஸ்க்ரூவாலா - 12 800 கோடி - யுடிவி மோஷன் பிக்ச்சர்ஸ் மற்றும் ஆர்.எஸ்.வி.பி மூவீஸ்
ஆதித்யா சோப்ரா - 7,500 கோடி - யாஷ் ராஜ் பிலிம்ஸ்
அர்ஜன் & கிஷோர் லுல்லா 7,400 கோடி - ஈரோஸ் இன்டர்நேஷனல்
கரண் ஜோஹர் - 1,700 கோடி - தர்மா புரொடக்ஷன்ஸ்
கௌரி கான் - 1,600 கோடி - ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மென்ட்
அமீர் கான் - 1,500 கோடி - ஆமிர் கான் ப்ரொடக்ஷன்ஸ்
பூஷன் குமார் - 1400 கோடி - டி சீரிஸ் (இசை மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம்)
சஜித் நதியத்வாலா - 1,100 கோடி - நதியத்வாலா கிராண்ட்சன் என்டர்டெயின்மென்ட்
ஏக்தா கபூர் - 1,030 கோடி - பாலாஜி டெலிஃபிலிம்ஸ்
கூலி





















