சாவி இல்ல ஸ்கேனிங் தான்.. ஆனாலும் தூக்கிட்டாங்க.. டாம் குரூஸ் காரை திருடிய மர்ம நபர்!
டாம் குருஸின் பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 கார் திருடப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஹாலிவுட்டில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் டாம் குருஸ். இவர் படங்களில் நடிப்பது மட்டுமின்றி, திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். இவரது நடிப்பில் ஹாலிவுட்டில் வசூலை வாரி குவித்த படம் மிஷன் இம்பாஷிபிள். இந்த படத்தின் 7ஆவது தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இவர் படப்பிடிப்பின் போது தனது சொகுசு காரான பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 காரை தன்னுடன் எடுத்து சென்றார். படப்பிடிப்பின் போது, தனது காரை கிராண்ட் ஹோட்டல் வாசலின் வெளியே நிறுத்தி வைத்தி இருந்தார். அதில் அவருடைய பல லட்சம் மதிப்புடைய பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் ஹோட்டலுக்கு வெளியே, பார்க் செய்யத்திருந்த இவருடைய காரின் சாவி இல்லாத காரணத்தினால், கொள்ளையர்கள் காரை ஸ்கேனர் செய்து திருடிச் சென்றுள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல் துறையினரிடம் புகார் கொடுத்தனர். அப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், திருட்டுப் போன காரில் உள்ள மின்னணு கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டிருந்ததால் அதனை மீட்டனர்.
கார் பத்திரமாக மீட்கப்பட்டாலும், அதற்குள் இருந்த டாம் குரூஸின் பொருள்கள் திருடப்பட்டது. அதனை காவலர்கள் தேடி வருகின்றனர். டாம் குரூஸின் கார் திருடப்பட்ட சம்பவம் ஹாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவரது சொசு கார் காணமல் போன சம்பவம் அவரது பாதுகாப்பு குழுவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்ன தான் கார் மீட்கப்பட்டாலும், இந்த சம்பவத்தால் டாம் குருஸ் கடும் கோபம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
கார் ஸ்டண்ட் செய்வதில் வல்லவரான டாம் குரூஸிடமே கார் திருட்டு செய்யப்பட்டுள்ளது சமூக வலைத்தளத்தில் பேச்சு பொருள் ஆகி உள்ளது.
உலகம் முழுவதும் மிஷன் இம்பாசிபிள் படத்தின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் உருவாக்கி வைத்துள்ளார் நடிகர் டாம் க்ருஸ். இப்படத்தில் அவரது அதிரடி சண்டைக் காட்சிகள் தான் இவரை உலகம் முழுவதும் ரசிகர்கள் உருவாக்கியது என்றே சொல்லாம். மிஷன் இம்பாசிபிள் 7ஆவது பாகத்தின் மீது ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இத்திரைப்படம் முன்னதாக ஜூலை 23ஆம் தேதி 7ஆம் பாகத்தையும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனாள் கரோனா நெருக்கடி காரணமாக படம் சொன்ன தேதியில் முடிக்க முடியாமல் பல முறை படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டு, ரிலீஸ் தேதியும் தள்ளிப் போகிறது.