மேலும் அறிய

HBD Chiranjeevi: ஈகோ பார்க்காமல் சக நடிகர்களுடன் நட்பு.. தெலுங்கு சினிமாவில் புரட்சி நாயகன் சிரஞ்சீவி..!

டோலிவுட் சூப்பர்ஸ்டார் என்றாலும் மற்ற திரையுலகின் ஸ்டார் நடிகர்களுடன் மிகவும் நெருக்கமான ஒரு நட்பை கொண்டவர் நடிகர் சிரஞ்சீவி. சல்மான் கான், ரஜினிகாந்த் உடன் கொண்டுள்ள நட்பு குறித்து பேசியிருந்தார்

தெலுங்கு திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியாக துள்ளலான நடிப்பாலும், அசத்தலான நடந்தாலும், மிரள வைக்கும் ஆக்ஷன் காட்சிகளாலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தன் பின்னால் வைத்துள்ளவர் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. இந்த ஸ்டார் ஹீரோ இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

சிரஞ்சீவியின் பிறந்தநாளான இன்று அவரின் சினிமா வட்டத்துக்குள் இருக்கும் நட்புறவு குறித்து பார்க்கலாம். டோலிவுட் சினிமா கொண்டாடும் இந்த ஸ்டார் நடிகர் மற்ற மொழி திரைத்துறையின் ஸ்டார் நடிகர்களுடன் நல்ல உறவை இன்று வரை மெயின்டெய்ன் செய்து வருகிறார். சல்மான் கான், ரஜினிகாந்த், மோகன்லால் என எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் அனைவருடனும் நல்ல நட்பை கொண்டுள்ளார்.

சமீபத்தில் சிரஞ்சீவி கலந்து கொண்ட ஒரு நேர்காணலில் அவருக்கும் சல்மான் கான், ரஜினிகாந்த் இருவருக்கும் இடையே இருக்கும் ஒற்றுமை மற்றும் வேறுபாடுகள் குறித்து சுவாரசியமாக பேசியிருந்தார்.

HBD Chiranjeevi: ஈகோ பார்க்காமல் சக நடிகர்களுடன் நட்பு.. தெலுங்கு சினிமாவில் புரட்சி நாயகன் சிரஞ்சீவி..!

குறும்புக்கார சல்மான் :

"தம்ஸ் அப் விளம்பரத்தில் இணைந்து நடித்ததன் மூலம் சல்மான் கானுடன் நட்பு பலப்பட்டது. அவர் ஒரு நல்ல மனிதர். நான் மும்பைக்கு செல்லும் போதெல்லாம் அவருடைய வீட்டுக்கு என்னை அழைத்து நன்றாக உபசரிப்பார். நாங்கள் இருவரும் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்டு இருந்தாலும் நாங்கள் இருவரும் நன்றாக பழகிக்கொள்வோம். என்னுடைய ஆளுமை மற்றும் பழகும் விதம் அவருக்கு பிடித்ததால் நாங்கள் இருவரும் நெருக்கமாகிவிட்டோம். இருந்தாலும் அவரை போல நான் குறும்புக்காரன் அல்ல" என்று கூறியிருந்தார் சிரஞ்சீவி. 

ரஜினிகாந்த் - சிரஞ்சீவி நட்பு :

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து பேசுகையில் " ரஜினி மிகவும் மென்மையானவர். தன்னடக்கம் கொண்டவர். எல்லாவற்றிற்கும் மிகவும் உணர்ச்சிவசப்படுவார். இருவருமே ஒரே மாதிரியான மாஸ் ஆக்ஷன் ஹீரோக்கள் என்ற இமேஜை கொண்டு இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. அவர் எனக்கு மிகவும் நெருக்கமானவர்" என கூறியிருந்தார். 

HBD Chiranjeevi: ஈகோ பார்க்காமல் சக நடிகர்களுடன் நட்பு.. தெலுங்கு சினிமாவில் புரட்சி நாயகன் சிரஞ்சீவி..!

அரசியல் பிரவேசம் :

2007ம் ஆண்டு வெளியான "சங்கர் தாதா ஜிந்தாபாத்" திரைப்படத்திற்கு பிறகு முழுமையாக அரசியலில் குதித்த சிரஞ்சீவி சினிமாவில் இருந்து விலகினார். தற்போது மீண்டும் நடிப்பில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். சமீபத்தில் அவர் நடிப்பில் போலோ ஷங்கர் படம் வெளியாகியிருந்தது. மகன் ராம் சரண் நடிக்கும் "புரூஸ் லீ" படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.  

நடிப்பில் ரீ என்ட்ரி :

மீண்டும் அவர் நடிப்பில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளதால் அவரின் ரசிகர்கள் பேரானந்தத்தில் உள்ளனர். சோஷியல் மீடியா மூலம் திரை பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

BCCI: சொம்பு தூக்குனா ஆல்-ஃபார்மெட் ப்ளேயரா? அவரு என்ன எக்ஸ்ட்ரா லக்கேஜா? டார்கெட் கம்பீர் - அகர்கர்
BCCI: சொம்பு தூக்குனா ஆல்-ஃபார்மெட் ப்ளேயரா? அவரு என்ன எக்ஸ்ட்ரா லக்கேஜா? டார்கெட் கம்பீர் - அகர்கர்
TN Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை; வானிலை மையம் கொடுத்த அப்டேட்
தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை; வானிலை மையம் கொடுத்த அப்டேட்
Top 10 News Headlines: அதிமுக தேர்தல் வியூகம், மீண்டும் இந்தியா-பாக். குறித்து பேசிய ட்ரம்ப், இன்றும் தெரியும் சூப்பர் மூன் - 11 மணி செய்திகள்
அதிமுக தேர்தல் வியூகம், மீண்டும் இந்தியா-பாக். குறித்து பேசிய ட்ரம்ப், இன்றும் தெரியும் சூப்பர் மூன் - 11 மணி செய்திகள்
STR 49: சிம்பு - வெற்றிமாறன் கூட்டணி, மிரட்டலான போஸ்டருன் டைட்டிலை அறிவித்த தயாரிப்பாளர் தாணு
STR 49: சிம்பு - வெற்றிமாறன் கூட்டணி, மிரட்டலான போஸ்டருன் டைட்டிலை அறிவித்த தயாரிப்பாளர் தாணு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CJI Attack|தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு!அத்துமீறிய வழக்கறிஞர் கைது!உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு
Senthil Balaji vs Supreme Court : ’’நான் அமைச்சர் ஆகணும்’’நீதிபதி vs செந்தில் பாலாஜி காரசார விவாதம்
கரூர் செல்லும் விஜய் மா.செ-க்களுக்கு முக்கிய ORDER தவெகவின் அடுத்த பிளான் | Vijay | TVK Karur Stampede
கரூர் துயரம்- யார் காரணம்?NDA குழு பகீர் REPORT ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக | NDA Team On Karur Stampade
கதவை பூட்டிய மாமியார் வாசலில் கதறி அழுத மருமகள் ”வரதட்சணை கொடுமை தாங்கல” | Thiruvarur Dowry Case

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BCCI: சொம்பு தூக்குனா ஆல்-ஃபார்மெட் ப்ளேயரா? அவரு என்ன எக்ஸ்ட்ரா லக்கேஜா? டார்கெட் கம்பீர் - அகர்கர்
BCCI: சொம்பு தூக்குனா ஆல்-ஃபார்மெட் ப்ளேயரா? அவரு என்ன எக்ஸ்ட்ரா லக்கேஜா? டார்கெட் கம்பீர் - அகர்கர்
TN Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை; வானிலை மையம் கொடுத்த அப்டேட்
தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை; வானிலை மையம் கொடுத்த அப்டேட்
Top 10 News Headlines: அதிமுக தேர்தல் வியூகம், மீண்டும் இந்தியா-பாக். குறித்து பேசிய ட்ரம்ப், இன்றும் தெரியும் சூப்பர் மூன் - 11 மணி செய்திகள்
அதிமுக தேர்தல் வியூகம், மீண்டும் இந்தியா-பாக். குறித்து பேசிய ட்ரம்ப், இன்றும் தெரியும் சூப்பர் மூன் - 11 மணி செய்திகள்
STR 49: சிம்பு - வெற்றிமாறன் கூட்டணி, மிரட்டலான போஸ்டருன் டைட்டிலை அறிவித்த தயாரிப்பாளர் தாணு
STR 49: சிம்பு - வெற்றிமாறன் கூட்டணி, மிரட்டலான போஸ்டருன் டைட்டிலை அறிவித்த தயாரிப்பாளர் தாணு
Gaza Trump Netanyahu: காசா பேச்சுவார்த்தை; நெதன்யாகுவை கெட்ட வார்த்தையில் திட்டிய ட்ரம்ப் - இப்படி வச்சு செஞ்சுட்டாரே.!
காசா பேச்சுவார்த்தை; நெதன்யாகுவை கெட்ட வார்த்தையில் திட்டிய ட்ரம்ப் - இப்படி வச்சு செஞ்சுட்டாரே.!
Tamilnadu Roundup: உதயநிதி ஆய்வு, ஆனந்த், நிர்மல்குமாருக்கு ஜாமின் கிடைக்குமா?, ரூ.90,000-த்தை நெருங்கிய தங்கம் - 10 மணி செய்திகள்
உதயநிதி ஆய்வு, ஆனந்த், நிர்மல்குமாருக்கு ஜாமின் கிடைக்குமா?, ரூ.90,000-த்தை நெருங்கிய தங்கம் - 10 மணி செய்திகள்
Bihar Elections 2025: நிஜத்தில் நிதிஷ் Vs தேஜஸ்வி, நிழலில் மோடி Vs ராகுல் - பீகார் தேர்தல், வெற்றிக்கான 5 முக்கிய காரணிகள்
Bihar Elections 2025: நிஜத்தில் நிதிஷ் Vs தேஜஸ்வி, நிழலில் மோடி Vs ராகுல் - பீகார் தேர்தல், வெற்றிக்கான 5 முக்கிய காரணிகள்
Trump Tariff: ட்ரம்ப்பின் அடுத்த குண்டு - நடுத்தர, பெரிய லாரிகளுக்கு 25% வரி - ஷாக்கில் இந்திய நிறுவனங்கள்?
Trump Tariff: ட்ரம்ப்பின் அடுத்த குண்டு - நடுத்தர, பெரிய லாரிகளுக்கு 25% வரி - ஷாக்கில் இந்திய நிறுவனங்கள்?
Embed widget