chalapathi Rao: 1200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்!
டோலிவுட் சினிமாவில் 1200க்கும் மேற்பட்ட பிரபல நடிகரான சலபதி ராவ் கடந்த சில நாட்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார்.
தெலுங்கு திரை உலகின் மூத்த நடிகராக சலபதி ராவ் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 78.
டோலிவுட் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் கலக்கி வந்த சலபதி ராவ், தனது காமெடி மற்றும் வில்லன் பாத்திரங்களால் தெலுங்கு சினிமாவில் தனக்கென தனி இடம்பிடித்தார்.
View this post on Instagram
ஆந்திரப் பிரதேசம், பலிபரு பகுதியைச் சேர்ந்த சலபதி ராவ், சாக்ஷி, ட்ரைவர் ராமுடு, வஜ்ரம் உள்ளிட்ட தெலுங்கு படங்களின் மூலம் தெலுங்கு சினிமா ரசிகர்களின் இதயங்களை வென்றார். கிக் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்தார். அருந்ததி உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் பரிட்சயமானார்.
இவரது மகன் ரவி பாபுவும் தெலுங்கு சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என பன்முகக் கலைஞராக வலம் வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த சலபதி ராவ் இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது இழப்பு டோலிவுட் பிரபலங்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் சலபதி ராவின் படக்காட்சிகள், புகைப்படங்களைப் பகிர்ந்து அவரது ரசிகர்கள் இணையத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
నువ్వు కూడా వెళ్లిపోయావా సత్యన్నా.. pic.twitter.com/jrXRPDxnaK
— Chalapati Rao Tammareddy (@ChalapatiRao_T) December 23, 2022
தெலுங்கு சினிமாவின் முக்கிய நிகழ்வுகள், நடிகர்கள் பற்றிய தகவல்களை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஆக்டிவாக இருந்து வந்த சலபதி ராவின் இறுதி ட்வீட்டும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.