Vijay's Next Movie | டோலிவுட் இயக்குநருடன் இணைகிறாரா விஜய்? தளபதி 66 அப்டேட்ஸை எதிர்பார்க்கலாமா?
நெல்சன் இயக்கும் ‘தளபதி 65’ படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்ததாக பிரபல டோலிவுட் இயக்குநருடன் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
இயக்குநர் நெல்சன், தளபதி 65-ஐ இயக்குகிறார் என்பது அனைவரும் அறிந்ததே, இந்நிலையில் ஜார்ஜியா நாட்டில் தளபதி 65 படப்பிடிப்பு முடிந்து படக்குழு சென்னை திரும்பியுள்ளனர் . கோவிட் -19 காரணமாக திரையுலகம் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில் விஜய் தனது அடுத்த திட்டத்தில் அடியெடுத்து வைக்கிறார் என்று தெரியவந்துள்ளது .
சமீபத்தில் ஜார்ஜியாவிலிருந்து தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பிலிருந்து திரும்பி வந்த நடிகர், தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் வம்சி பைடிபள்ளியின் அடுத்த படத்தில் பணியாற்ற சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. வம்சி பைடிபள்ளியின் அடுத்தது படம் இருமொழி படமாக இருக்கும் என்று அறியமுடிகிறது. இயங்குநர் விஜய்யுடன் சில சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும், தற்போது தளபதி 66 என்று குறிப்பிடப்படும் இந்த படத்தில் நடிக்க நடிகர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
வம்சி பைடிபள்ளி கதையில் சில மாற்றங்களை செய்து மீண்டு நடிகர் விஜயை சந்திக்கவிருக்கிறார். மேலும் இந்த திட்டம் குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் . ஜூனியர் என்.டி.ஆருடன் பிருந்தாவனம், ஓபிரி (தமிழில் தோழா ), மகேஷ் பாபுவுடன் மகர்ஷி போன்ற மறக்கமுடியாத தெலுங்கு திரைப்படங்களை இயக்குநர் இயக்கியுள்ளார். நடிகர் ஏ.ஆர்.முருகதாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார், சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளதாக கூறப்பட்டது. சில காரணங்களினால் இந்த படம் கைவிடப்பட்டது. தளபதி 66 பற்றிய அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருப்போம்.