Rashmika On Arabikuthu : அரபிக்குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட ராஷ்மிகா - வருண் தவான்..! வைரல் வீடியோ உள்ளே..!
பீஸ்ட் படத்தில் பிரபலமான அரபிக்குத்து பாடலுக்கு வருண்தவானும், ராஷ்மிகா மந்தனாவும் நடனம் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி காதலர் தினத்தில் வெளியிடப்பட்டது. யூ டியூப்பில் வெளியிடப்பட்ட இந்த பாடல் மாபெரும் ஹிட் அடித்துள்ளது. யூ டியூப்பில் மட்டும் இதுவரை 150 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இந்த பாடலை பார்த்து ரசித்துள்ளனர். மேலும், பிரபல நடிகர்கள், நடிகைகள் என பலரும் இந்த பாடலுக்கு நடனம் ஆடி வருகின்றனர்.
இந்த நிலையில், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனாவும் அரபிக்குத்து பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். அவர் தற்போது பிரபல இந்தி நடிகர் வருண் தவானுடன் இணைந்து நடனம் ஆடியுள்ளார். கடற்கரை ஒன்றில் நடைபெற்ற படப்பிடிப்பின் இடைவெளியில் வருண் தவானும், ராஷ்மிகா மந்தனாவும் இணைந்து அரபிக்குத்து பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளனர்.
yes i needed varun dhawan and rashmika mandanna to dance on halamithi habibo, and i GOT it 😭🔥#VarunDhawan | #RashmikaMandanna pic.twitter.com/MdSiuo3qvI
— annesha. (@ApnaaVarun) March 10, 2022
இவர்கள் இருவரும் ஆடிய நடனம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 14-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. சன்பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் செல்வராகவன், ஷபீர் கல்லக்கல், வி.டி.வி. கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
அரபிக்குத்து பாடலுக்கு கிடைத்த அமோக வரவேற்பால் இந்த பாடல் தற்போது வரை சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. கீர்த்தி சுரேஷ், சமந்தா என முன்னணி நடிகைகள், சின்னத்திரை நடிகைகள் என பலரும் அரபிக்குத்து பாடலுக்கு நடனம் ஆடி தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Aishwaryaa-Simbu Combo: மாஸ் ஹீரோவுக்கான திரைக்கதை ரெடி.. சிம்புவுடன் கைகோக்கும் ஐஸ்வர்யா ரஜினி!? ரசிகர்கள் உற்சாகம்!
மேலும் படிக்க : Rashmika Mandanna YouTube: என்னைய பத்தி தெரிஞ்சுக்கணுமா.. இங்க வாங்க.. யூடியூப் சேனலில் முதல் வீடியோவை வெளியிட்ட ராஷ்மிகா மந்தனா..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்