Cinema Headlines: மகான்2 அப்டேட்.. விஜய்க்கு வாய்ப்பு கொடுக்க மறுத்த ரஜினி.. இன்றைய சினிமா செய்திகள்
Cinema Headlines: இன்றைய சினிமா தலைப்புச் செய்திகளை கீழே விரிவாக பார்க்கலாம்.
Jayam Ravi: "தூக்கத்தில் எழுப்பி நடிக்கச் சொன்னால் கூட நடிப்பேன்" - சைரன் படம் குறித்து ஜெயம் ரவி ஆர்வம்!
Home Movie Makers சார்பாக தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் “சைரன்”. பிப்ரவரி 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, திரைப்படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் படிக்க
Watch Video : சூர்யா படத்தால் 8 மாசம் வாய்ப்பில்லாமல் போனது - நடிகர் ஜெகனின் வைரல் வீடியோ!
2005 ஆம் ஆண்டு வெளியான ‘கண்ட நாள் முதல்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஜெகன். இவர் 2007 ஆம் ஆண்டு கிங் குயின் ஜேக் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தொடர்ந்து பல படங்களில் நடிக்கத் தொடங்கிய ஜெகனுக்கு சூர்யா நடிப்பில் வெளியான ‘அயன்’ படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு பையா, சிக்கு புக்கு, கோ, அம்புலி, வத்திக்குச்சி, பட்டத்து யானை, என்றென்றும் புன்னகை, வல்லினம், நான் சிகப்பு மனிதன், இரும்புக்குதிரை, கவண், மிஸ்டர் சந்திரமௌலி, அசுரகுரு, ஜாக்பாட் என பல படங்களில் நடித்துள்ளார். மேலும் படிக்க
Mahaan 2: எவன்டா எனக்கு கஸ்டடி.. மீண்டும் வரும் காந்தி மகான்: 2ஆம் பாகம் பற்றி அப்டேட் தந்த விக்ரம்!
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான மகான் படத்தின் இரண்டாம் பாகம் பற்றி தகவல் கொடுத்துள்ளார் நடிகர் விக்ரம். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான படம் மகான். விக்ரம் ,துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். கொரோனா நோய்த் தொற்று காரணமாக இப்படம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியது. சமீபத்தில் இப்படம் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்தது. மேலும் படிக்க
S.J.Suryah - Vignesh Shivan: எல்.ஐ.சி முதல் நாள் ஷூட்டிங்: விக்னேஷ் சிவனை புகழ்ந்து தள்ளிய எஸ்.ஜே.சூர்யா!
ஏகே 62 திரைப்படம் ட்ராப் ஆன பிறகு சென்ற ஆண்டு முழுக்க விக்னேஷ் சிவன் அமைதி காத்து வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாத மத்தியில் அவரது அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது. ‘லவ் டுடே’ திரைப்படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் சென்சேஷனாக மாறிய இயக்குநர், நடிகர் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, இப்படத்துக்கு எல்.ஐ.சி (லவ் இன்ஸூரன்ஸ் கார்ப்பரேஷன்) எனப் பெயரிடப்பட்டது. க்ரித்தி ஷெட்டி ஹீரோயினாக கமிட்டானார். மேலும் படிக்க
Thalapathy Vijay: ரஜினி படத்தில் தேடிப்போய் வாய்ப்பு கேட்ட விஜய்! மறுத்த கே.எஸ்.ரவிகுமார் - காரணம் இதுதான்!
படையப்பா படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இன்றளவும் டிவியில் ஒளிபரப்பினாலும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடிக்கும் அளவுக்கு இப்படத்தில் மாஸ்ஸான காட்சிகள் பல உள்ளது. குறிப்பாக ரம்யா கிருஷ்ணன் நடித்த ‘நீலாம்பரி’ கேரக்டர் அவரின் அடையாளமாகவே மாறிப்போனது. எத்தனை படங்களில் நடித்தாலும் இன்னும் நீலாம்பரி போல இருக்க வேண்டும் என்று தான் ரம்யா கிருஷ்ணனை பலரும் கேட்கின்றனர். மேலும் படிக்க