மேலும் அறிய

S.J.Suryah - Vignesh Shivan: எல்.ஐ.சி முதல் நாள் ஷூட்டிங்: விக்னேஷ் சிவனை புகழ்ந்து தள்ளிய எஸ்.ஜே.சூர்யா!

இயக்குநர் விக்னேஷ் சிவனைப் புகழ்ந்து எஸ்.ஜே.சூர்யா பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.

ஏகே 62 திரைப்படம் ட்ராப் ஆன பிறகு சென்ற ஆண்டு முழுக்க விக்னேஷ் சிவன் அமைதி காத்து வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாத மத்தியில் அவரது அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது. 

‘லவ் டுடே’ திரைப்படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் சென்சேஷனாக மாறிய இயக்குநர், நடிகர் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, இப்படத்துக்கு எல்.ஐ.சி (லவ் இன்ஸூரன்ஸ் கார்ப்பரேஷன்) எனப் பெயரிடப்பட்டது. க்ரித்தி ஷெட்டி ஹீரோயினாக கமிட்டானார்.

மேலும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, சீமான் கௌரவக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், யோகி பாபு உள்ளிட்டோரும் இப்படத்தில் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரவுடி பிச்சர்ஸ் மற்றும் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தைத் தயாரிக்க, அனிருத் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

இளைஞர்களைக் குறிவைத்து காதல் கதையாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு. கடந்த டிச.15ஆம் தேதி தொடங்கி முழு வீச்சில்  நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விக்னேஷ் சிவனை வெகுவாகப் புகழ்ந்து எஸ்.ஜே.சூர்யா தற்போது பதிவிட்டுள்ளார்.  “இந்த அன்புக்கு நன்றி இயக்குநர் விக்னேஷ் சிவன் சார். எல்.ஐ.சி படத்தில் எனது முதல் நாள் ஷூட்டிங். நான் மிகவும் எஞ்சாய் செய்தேன். படப்பிடிப்பின் போது, என் பர்ஃபாமென்ஸில் நீங்கள் கேட்டுக்கொண்ட நுணுக்கங்களை எல்லாம் நான் மிகவும் ரசித்தேன். அடுத்தடுத்த படப்பிடிப்புக்காக நான் காத்திருக்கிறேன். நீங்களும் ஒளிப்பதிவாளர் ரவிவர்மனும் இந்த சீனுக்காக எனக்கு கொடுத்துள்ள லுக் வாவ்” எனப் பதிவிட்டுள்ளார்.

 

இயக்குநராகவும் சரி, நடிகராகவும் சரி தனக்கென தனி பாணி கொண்டு கலக்கி வரும் எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் விக்னேஷ் சிவனை இப்படி  உச்சி முகர்ந்து புகழ்ந்துள்ள பதிவு இணையத்தில் தற்போது லைக்ஸ் அள்ளி வருகிறது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

6 முறை காதல் தோல்வி.. தற்கொலை எண்ணம் வரை சென்ற ஆல்யா மானசா! சஞ்சீவ் குறித்து உருக்கமான பேட்டி!
6 முறை காதல் தோல்வி.. தற்கொலை எண்ணம் வரை சென்ற ஆல்யா மானசா! சஞ்சீவ் குறித்து உருக்கமான பேட்டி!
போக்சோ வழக்கில் கும்கி பட நடிகருக்கு ஒராண்டு சிறை தண்டனை!
போக்சோ வழக்கில் கும்கி பட நடிகருக்கு ஒராண்டு சிறை தண்டனை!
ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் மோகன்லால்.. சங்கத்தின் செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசியதால் சர்ச்சை
ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் மோகன்லால்.. சங்கத்தின் செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசியதால் சர்ச்சை
Karthigai Deepam: கைதாகிய ஸ்ரேயா.. கேக் வெட்டிய சாமுண்டீஸ்வரி குடும்பம்..! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கைதாகிய ஸ்ரேயா.. கேக் வெட்டிய சாமுண்டீஸ்வரி குடும்பம்..! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆட்சியை நடத்த இத்தனை சவால்களா? விஜய் சந்திக்கும் 8 சவால்கள் - ஓர் அலசல்
CM Vijay: ஆட்சியை நடத்த இத்தனை சவால்களா? விஜய் சந்திக்கும் 8 சவால்கள் - ஓர் அலசல்
Kallakurichi MLA: மாவட்ட ஆட்சியர் விவகாரம் - பாலியல் தொல்லை பிரிவில் TVK MLA அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு
மாவட்ட ஆட்சியர் விவகாரம் - பாலியல் தொல்லை பிரிவில் TVK MLA அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு
WTC Final: டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்குச் செல்லுமா இந்தியா? அப்போ இதெல்லாம் நடக்கனும் ப்ரோ!
WTC Final: டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்குச் செல்லுமா இந்தியா? அப்போ இதெல்லாம் நடக்கனும் ப்ரோ!
Kallakurichi MLA: கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., சர்ச்சை.. குற்றம் நிரூபணமானால் இவ்ளோ தண்டனை இருக்கா? சட்டம் சொல்வது என்ன?
கள்ளக்குறிச்சி MLA சர்ச்சை.. குற்றம் நிரூபணமானால் இவ்ளோ தண்டனை இருக்கா? சட்டம் சொல்வது என்ன?
6 முறை காதல் தோல்வி.. தற்கொலை எண்ணம் வரை சென்ற ஆல்யா மானசா! சஞ்சீவ் குறித்து உருக்கமான பேட்டி!
6 முறை காதல் தோல்வி.. தற்கொலை எண்ணம் வரை சென்ற ஆல்யா மானசா! சஞ்சீவ் குறித்து உருக்கமான பேட்டி!
Hyundai Ioniq P EV: மலிவு விலையில் புதிய மின்சார எஸ்யுவி..! எப்போது வரும்? விலை அப்படி? அம்சங்கள் ஈர்க்குமா?
மலிவு விலையில் புதிய மின்சார எஸ்யுவி..! எப்போது வரும்? விலை அப்படி? அம்சங்கள் ஈர்க்குமா?
Udhayanidhi:
Udhayanidhi: "பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்கத்தான் ஆட்சியா?" முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கேள்வி
UPSC படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் நிதியுதவி! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
UPSC படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் நிதியுதவி! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Embed widget