குழப்பத்தை ஏற்படுத்திய தாத்தா.. மகனே சித்தப்பாவாகிய கதை.. கதறி அழுத இளைஞர்..!
எனது மகன் என நினைத்துக்கொண்டு இருந்த குழந்தை, எனக்கு சித்தப்பாவாக மாறியுள்ளது என கண்ணீர் வடித்துள்ளார் ஒரு இளைஞர்.
இப்படியுமா நடக்கும் என்ற ஒரு கதையை உலக சினிமாக்கள் சில காட்சிப்படுத்தும் அப்படியான ஒரு ப்ரெஞ்ச் படம் தான் 'இன்செண்டீஸ்'. தம்பியும், அக்காவும் தன்னுடைய தந்தையையும், தொலைந்துபோன அண்ணனையும் தேடுவார்கள். கடைசியில் ஒவ்வொருவருமே ஒரே ஆள் எனத் தெரியவரும். சற்று குழப்பமாக இருந்தாலும் அதுதான் உண்மை என முடியும் கதை. சூழ்நிலை சில நேரங்களில் சில குழப்பமான நிகழ்வுகளை ஏற்படுத்தி விடுகிறது. அப்படியான ஒரு சம்பவத்தை டிக் டாக்கில் கண்ணீருடன் பகிர்ந்துள்ளார் ஒருவர்.
@stacks1400 என்ற கணக்கில் கண்ணீருடன் பேசிய நபர் ஒருவர் நான் சொல்லும் விநோதமான சம்பவம் உறவுகள் மீது நம்பிக்கை இழக்கச் செய்யும். எனது மகன் என நினைத்துக்கொண்டு இருந்த குழந்தை எனக்கு சித்தப்பாவாக மாறியுள்ளது என கண்ணீர் வடித்துள்ளார். என்ன குழப்பம் என்பவர்களுக்கு அவர் விளக்கத்தையும் அளித்துள்ளர்.
நானும் என் தாத்தாவும் ஒரே வீட்டில் வசித்து வந்தோம். எனக்கும், என் காதலிக்கும் ஒரு குழந்தை பிறந்தது. அது என் குழந்தை என்றே நினைத்து வந்தேன். ஆனால் என் காதலிக்கும் என் தாத்தாவுக்கும் ஏற்கெனவே தொடர்பு இருந்துள்ளது. நான் இல்லாத நேரம் அவர் என் காதலியுடன் பழகி வந்துள்ளார். அவர்களின் பழக்கத்தில் பிறந்த குழந்தைதான் இது. இப்போது அது என் சித்தப்பா. இப்படியான ஒரு கொடூர சம்பவம் நிகழும் என நான் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார். எப்படி இந்த சம்பவம் உங்களுக்கு தெரியவந்தது? என சிலர் குறுக்குக் கேள்வி கேட்க, ஒருநாள் எனது காதலியின் செல்போனை பார்த்தேன். அதன் மூலமே என் தாத்தாவுக்கும், என் காதலிக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது. சந்தேகம் அடைந்து குழந்தை யாருடையது என்பதை தெரிந்துகொள்ள டி என் ஏ பரிசோதனை மேற்கொண்டேன் என குறிப்பிட்டுள்ளார்.
புது விதமான விநோத சம்பவமாக இருந்தாலும், கண்ணீருடன் கதையை பகிர்ந்த அந்த இளைஞருக்கு பலரும் ஆறுதல்களை தெரிவித்தனர்.
ஆனால் இந்தக்குற்றத்தில் குழந்தை என்ன தவறு செய்தது? அது ஒருக்குற்றமும் செய்யவில்லை. அதனால் குழந்தை மீதான அன்பை நான் குறைக்கப்போவதில்லை. அதனை நான் தண்டிக்கப்போவதில்லை என்று பேசியுள்ளார் அந்த இளைஞர். விநோத பிரச்னை என்றாலும் மன முதிர்ச்சியுடன் பேசும் அந்த இளைஞருக்கு இணையவாசிகள் பாராட்டுகளையும் ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் டிக்டாக்கில் வீவ்ஸ் வேண்டும் என்பதற்காகவும், பிரபலமடைய வேண்டும் என்பதற்காகவும் சிலர் எந்த எல்லைக்கும் செல்வார்கள், இப்போது அரங்கேறி இருக்கும் இந்த பிரச்சனை வீவ்ஸ்க்காக வெறும் நாடகமாகக் கூட இருக்கலாம் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.