GP Muthu Movie : பம்பர் படத்திற்காக துப்பாக்கி பாண்டியனாக மாறிய ஜி.பி. முத்து.. வந்த அப்டேட்ஸ்..
GP muthu movie : டிக்டாக் பிரபலம் ஜி.பி. முத்து வெற்றி - ஷிவானி நடிக்கும் பம்பர் படத்தில் நடிக்கிறார்.
டிக்டாக் மூலம் மிகவும் பிரபலமானவர் ஜி.பி.முத்து. இவர் உச்சரிக்கும் செத்த பயலே.. நாரப்பயலே என்ற வார்த்தை மூலம் மிகவும் தமிழ்நாடு மக்கள் இவரை மிகவும் ரசித்தனர். இவர் தனக்கென்று சொந்தமாக யூ டியூப் சேனல் தொடங்கி பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவர் சேனலுக்கு சுமார் 9 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.
டிக்டாக் மூலம் பிரபலமான ஜி.பி.முத்துவிற்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்து வருகிறது. தமிழில் சன்னிலியோன் நடிக்கும் ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் அவருடன் இணைந்து நடிக்கிறார். சன்னிலியோனுடன் ஜி.பி. முத்து நடிக்கிறார் என்பதன் மூலம் மிகவும் பிரபலமானார்.
இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்ற ஷிவானி நாராயணன் கதாநாயகி நடிக்க புதிய படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்திற்கு எட்டு தோட்டாக்கள், ஜீவி போன்ற படங்களில் நாயகனாக நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்க உள்ளார். பம்பர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் வெற்றி – ஷிவானி கூட்டணியுடன் ஜி.பி.முத்து நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு வசந்த் கோவிந்தா இசையமைக்கிறார்.
பம்பர் படத்தில் ஜிபி முத்து துப்பாக்கி பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கேரள லாட்டரியை மையமாக வைத்து திரில்லர் விதமாக இந்த படம் உருவாகி வருகிறது. ஜி.பி.முத்து புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதற்கு அவரது நண்பர்களும், ஃபாலோயர்களும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். மேலும், பல்வேறு புதிய படங்களில் நடிக்கவும் ஜி.பி.முத்துவிற்கு வாய்ப்பு வருகிறது.
மேலும் படிக்க : "9 மாசம்.. ஹவுஸ் ஓனர் வீட்டு நாய் கூட சின்ன ரூம்ல தங்குனேன்” : ’கோவா’ நடிகை பியா சொல்லும் பகீர்..
மேலும் படிக்க : Madan Gowri : மதன்கௌரியை ஒருமையில் திட்டிய நடிகை காஜல்...! ஏன் தெரியுமா..?
மேலும் படிக்க : Nazriya Nazim: நீங்க முஸ்லீம் பொண்ணு.. ஆனா படத்துல..! வில்லங்க கேள்வி.. நஸ்ரியா அளித்த நச் பதில்.!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்