காதலியுடன் ஹாயாக சுற்றிய நடிகர்; ‛வாங்க சார்...’ என வழக்கு பதிவு செய்த போலீஸ்!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறியதாக பிரபல பாலிவுட் நடிகர் மற்றும் அவரது காதலி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் மும்பை போலீசார்.

கொரோனாவின் இரண்டாம் அலை மிக கொடிய தாக்கத்தை இந்திய அளவில் ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியாவின் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகின்றது. ஆனால் இந்த ஊரடங்கை பலர் விடுமுறை நாட்களென்று எண்ணி மிகவும் பொறுப்பற்ற முறையில் தேவையின்றி வெளியில் சுற்றி வருகின்றனர். இதனால் உண்மையாகவே அவசர தேவைக்காக வெளியில் வருவோரும் சில சமயம் போலீசாரால் தண்டிக்கப்படும் நிகழ்வு அவ்வப்போது அரங்கேறி வருகின்றது. 

இந்நிலையில் பிரபல நடிகர் டைகர் ஷெராப் மற்றும் அவரது காதலி திஷா பதானி ஆகியோர் முறையாக காரணத்தை தெரிவிக்காமல் மும்பை காரில் சுற்றிய குற்றத்திற்காக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது மும்பை போலீஸ். பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராபின் மகன் தான் டைகர் என்பது குறிப்பிடத்தக்கது இவருடைய முழுப்பெயர் ஜெய் ஹேமந்த் ஷெராப் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் உலகின் மூத்த நடிகர் ஜாக்கி ஷெராப் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ரத்தக் கொதிப்பும் ரோஜா சீரியலும்... ஜி.பி.முத்து துணையோடு களமிறங்கிய மீம்சர்கள்!

தந்தையை போலவே நடிப்பில் ஆர்வம் கொண்ட டைகர் ஒரு சிறந்த ஸ்டண்ட் கலைஞர் என்பதும் தனது ஸ்டண்ட் காட்சிகளில் பலமுறை டூப் இல்லாமல் அவரே செய்துவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. டைகர் முதன்முதலில் 2014ம் ஆண்டு வெளியான ஹீரோபண்டி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு இவர் நடிப்பில் வெளியான பாகி திரைப்படம் அதன் சண்டை காட்சிகளுக்காக பெரிய அளவில் பேசப்பட்டது. 2017ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான 'ஸ்பைடர் மேன் ஹோம் கமிங்' திரைப்படத்தின் ஹிந்தி வெர்சனில் ஸ்பைடர் மேனுக்கு டப்பிங் செய்தது டைகர் என்பது குறிப்பிடத்தக்கது.       காதலியுடன் ஹாயாக சுற்றிய நடிகர்; ‛வாங்க சார்...’ என வழக்கு பதிவு செய்த போலீஸ்!

அதேபோல அவரது காதலி நடிகை திஷா பதானி 2015ம் ஆண்டு வெளியான Loafer என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு மறைந்த நடிகர் சுஷாந்த் நடிப்பில் வெளியான எம்.எஸ்.தோனி படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பலரின் பாராட்டுகளை பெற்றார் திஷா என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது டைகர் மற்றும் திஷா ஆகிய இருவரும் காதலித்து வருகின்னறனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் முறையான காரணமின்றி வெளியில் சுற்றிய நிலையில் மும்பை போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.    

Tags: Tiger Shiroff Disha patani Mumbai police Tiger Shiroff and Disha Patani

தொடர்புடைய செய்திகள்

Marvel Loki : ’சென்னை பையன்’ டாம் ஹிடில்ஸ்டன் நடித்த லோக்கி சீரிஸ், எப்படி இருக்கு?

Marvel Loki : ’சென்னை பையன்’ டாம் ஹிடில்ஸ்டன் நடித்த லோக்கி சீரிஸ், எப்படி இருக்கு?

மனோ குரலில், தரமான நைட் ப்ளேலிஸ்ட்!

மனோ குரலில், தரமான நைட் ப்ளேலிஸ்ட்!

புதிய வேலையில் களமிறங்கிய பிக்பாஸ் நிஷா : வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரீஸ்..!

புதிய வேலையில் களமிறங்கிய பிக்பாஸ் நிஷா : வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரீஸ்..!

Valimai Update | கடைசியாக கிடைத்தேவிட்டது வலிமை அப்டேட்..! அஜித்துக்கு இந்த ரோலா?

Valimai Update | கடைசியாக கிடைத்தேவிட்டது வலிமை அப்டேட்..! அஜித்துக்கு இந்த ரோலா?

”ஏன் சமைக்கணும்னு அம்மாகிட்ட சண்டைபோட்டேன்” - பாலின பாகுபாடு குறித்து வித்யா பாலன் ஷார்ப்!

”ஏன் சமைக்கணும்னு அம்மாகிட்ட சண்டைபோட்டேன்” - பாலின பாகுபாடு குறித்து வித்யா பாலன் ஷார்ப்!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News :தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News :தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

கோவை : 2000-க்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று! துளிர்க்கும் நம்பிக்கையில் மக்கள்!

கோவை : 2000-க்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று! துளிர்க்கும் நம்பிக்கையில் மக்கள்!