Tiger 3 Trailer Out:“இது டைகரோட தீபாவளி, எப்படி அதிருதுன்னு பாரு” சல்மான் கானின் டைகர் 3 ட்ரெயிலர் ரிலீஸ்!
பாலிவுட் திரையுலகின் மிகப்பெரிய நடிகரான சல்மான் கானின் டைகர் 3 படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.
Tiger 3 Trailer Out: 'இது டைகரோட தீபாவளி எப்படி அதிருதுன்னு பாரு' உள்ளிட்ட பஞ்ச் வசனங்களுடன் வெளியாகியுள்ளது சல்மான்கான் நடித்த டைகர் 3 படத்தின் டிரெய்லர்.
2012ம் ஆண்டு சல்மான் கான் நடிப்பில் ‘ஏக் தா டைகர்’ படம் ரிலீசானது. அதை தொடர்ந்து 2ம் பாகம் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மூன்றாம் தீபாவளி சரவெடியாக திரைக்கு வர உள்ளது.
சல்மான் கானின் டைகர் 3:
மணீஷ்சர்மா இயக்கியுள்ள டைகர் 3 படத்தில் கேத்ரீனா கைஃப், இம்ரான் ஹாஸ்மி, ரேவதி உள்ளிட்டோர் நடித்துள்ளது. யாஷ் நிறுவனம் ஸ்பை யுனிவர்ஸ் உடன் ஒன்றிணைந்து டைகர் 3 படத்தை தயாரித்துள்ளது. இதற்கு முன்னதாக ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த பதான் படமும், ஸ்பை யுனிவர்ஸில் இருந்து வெளியானது. பதானில் ஒரு கேமியோ ரோலில் டைகராகவே சல்மான்கான் வந்திருப்பார். ஆக்ஷன் ஜானரில் எடுக்கப்பட்ட பதான் படம் உலகளவில் வரவேற்பை பெற்றது.
தீபாவளி ரிலீஸ்:
இந்த நிலையில் தீபாவளி ட்ரீட்டாக டைகர் 3 படம் நவம்பர் 12ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் அதிரடி ஆக்ஷன் கலந்த படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. டைகர் 3 டீசரில், தன் மனைவி கேத்ரீனா கைஃப், மகனுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வரும் சல்மான் கானிற்கு நாட்டை காக்கும் பொறுப்பு வருகிறது. நாட்டை காப்பதா? அல்லது குடும்பத்தை காப்பதா? என்ற நெருக்கடிக்கு ஆளாகும் சல்மான் கான் ஒரு கட்டத்தில் மகனை இழக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. அதுவரை அமைதியான குடும்ப பெண்ணாக இருந்த கேத்ரீனா கைஃப் துப்பாக்கிகளை கையில் எடுத்து ஆக்ஷனில் வலம் வருகிறார்.
கெஸ்ட் ரோலில் சல்மானா?
ஒரு பக்கம் சல்மான் கான் வில்லனான இம்ரான் ஹாஷ்மியை எதிர்த்து நிற்கிறார். இப்படியாக போகும் காட்சிகளில், ஐ நீட் யுவர் மிஷன், ராவுக்காக இல்லை. பர்ஸ்னலுக்காக” சல்மான் கான் தொலைபேசியில் பேசும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதனால், பதானை உதவிக்கு சல்மான் கான் அழைக்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். பதானில் டைகராக சல்மான் கான் நடித்ததால், டைகர் படத்தில் பதானாக சல்மான் கான் வர வாய்ப்புள்ளது என்றே கூறப்படுகிறது.
இது மட்டும் இல்லாமல் வழக்கமான வில்லன்கள் மிரட்ட விடும் “ஒன்னு நாட்டை காப்பாத்தனும், இல்லை குடும்பத்தை காப்பாத்தனும்” என்ற பஞ்ச் டைலாக்கும், ”இது டைகரோட தீபாவளி, எப்படி அதிருதுன்னு பாரு, மூச்சு இருக்கறவரை விஸ்வாசம் அழியாது, தோல்வி என்பதே டைகருக்கு கிடையாது” போன்ற கிரிஞ்சியான வசனங்கள் மாஸான அதிரடி படத்துக்கு ஒத்துபோகவில்லை என்றே கூறப்படுகிறது.
மேலும் படிக்க: Leo Booking: ‘லியோ படத்திற்கு இதுதான் பிரச்சினையா?’ .. முதல் காட்சிக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்காமல் இருக்க காரணம்..!
Urvashi Rautela: 24 காரட் தங்க ஐஃபோனை காணவில்லை.. மோடி மைதானத்தில் தொலைத்த 'லெஜெண்ட்' பட நடிகை!