Thunivu Release: துணிவு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. அஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன போனி கபூர்..!
Thunivu Release Date: மூன்றாவது முறையாக இயக்குநர் ஹெச்.வினோத் - அஜித் குமார் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘துணிவு’.
நடிகர் அஜித்குமார் நடித்துள்ள துணிவு படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகார்ப்பூர்வமாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
துணிவு
மூன்றாவது முறையாக இயக்குநர் ஹெச்.வினோத் - அஜித் குமார் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘துணிவு’. மஞ்சு வாரியர் இப்படத்தின் ஹீரோயினாக நடித்துள்ள நிலையில் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. முன்னதாக கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியானது. வங்கி கொள்ளையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
@Radhakrishnaen9 @IVYProductions9 @Venkatupputuri @innamuri8888 @ghibranofficial @shabirmusic @vaisaghofficial @ManjuWarrier4 @nirav_dop #Milan @supremesundar @editorvijay #Kalyan #AnuVardhan @premkumaractor #MSenthil @suthanvfx #CSethu #SameerPandit @anandkumarstill
— Boney Kapoor (@BoneyKapoor) January 4, 2023
அடுத்தடுத்து வெளியான அப்டேட்
கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி துணிவு படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியது. இதனைத் தொடர்ந்து படத்தின் முதல் பாடலாக ‘சில்லா சில்லா’ பாடல் கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வைசாக் எழுதிய இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியிருந்தார். இதனையடுத்து டிசம்பர் 18 ஆம் தேதி “காசேதான் கடவுளடா” பாடல் வெளியானது. 3வது பாடலாக டிசம்பர் 25 ஆம் தேதி “கேங்ஸ்டா” பாடல் வெளியானது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
View this post on Instagram
இதன்பின்னர் டிசம்பர் 30 ஆம் தேதி வாரிசு படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகம் செய்தது. ஆனால் அஜித்தின் கதாபாத்திரம் மட்டும் சஸ்பென்ஸாக வைக்கப்பட்டுள்ளது. துணிவு படத்தின் ட்ரெய்லர் பீஸ்ட் படத்தைப் போல இருப்பதாக கருத்து எழுந்தாலும், ஸ்டைலிஷான அஜித்தை மீண்டும் பார்த்ததால் ரசிகர்கள் குதூகலமடைந்தனர்.
ரிலீஸ் தேதி அறிவிப்பு
பொங்கலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் துணிவு, வாரிசு படங்கள் ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் இருந்ததால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர். இந்நிலையில் துணிவு படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். அதன்படி ஜனவரி 11 ஆம் தேதி துணிவு படம் உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.