H.Vinoth: "சினிமாவுக்கு இவ்வளவு நேரம் ஒதுக்கத் தேவையில்லை.. ராமதாஸ், திருமா சொல்வது உண்மை.." ஹெச்.வினோத் பளிச் பேட்டி..!
”சினிமாவுக்கு இவ்வளவு நேரத்தை செலவிடத் தேவையில்லை. ஒரு ஹீரோவாலும், ப்ரொடக்ஷன் டீமாலும் உங்களுக்கு திருப்பி என்ன செய்ய முடியும்? நீங்கள் அவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்!” - ஹெச்.வினோத்
இந்த ஆண்டு பொங்கல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஸ்பெஷலாக அமைந்துள்ளது என சொல்லலாம். காரணம் 8 ஆண்டுகளுக்குப் பின் விஜய், அஜித் படங்கள் நேரடியாக மோதிக்கொள்கின்றன. ஒருபுறம் இரு தரப்பு படக்குழுவினரும் தீவிர ப்ரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், மற்றொரு புறம் எந்த படம் ஹிட்டாக போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது.
துணிவு பட ப்ரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் ஹெச்.வினோத், ரசிகர்கள் சினிமாவுக்கு இவ்வளவு நேரத்தை செலவிடத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசிய இயக்குநர் ஹெச்.வினோத், ”பெரிய நடிகர்கள் அனைவரின் பேருக்கும் அவர்களின் ரசிகர்கள் கொடுக்கிற நேரமும் அர்ப்பணிப்பும் தான் ப்ரொமோஷன்.
நூறு கோடி செலவு செய்தாலும் அந்த ப்ரொமோஷன் யாராலும் செய்ய முடியாது. அவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள். இதனால் பில்ட் அப் உருவாகிறது. நான் உனக்காக எவ்வளவு பண்ணியிருக்கேன் என்கிற நிலைமைக்கு அது வந்துவிடுகிறது. ஆனால், ஒரு ஹீரோவாலும், ப்ரொடக்ஷன் டீமாலும் உங்களுக்கு திருப்பி என்ன செய்ய முடியும்? நீங்கள் அவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்!
View this post on Instagram
ராமதாஸ், அண்ணன் திருமா இவர்களெல்லாம், சினிமாவில் மக்கள் அதிகம் புழங்குவதாக கோபப்படுகிறார்கள் அல்லவா..? அது தான் உண்மை.
சினிமாவுக்கு இவ்வளவு நேரத்தை செலவிடத் தேவையில்லை. பொங்கலுக்கு படம் ரிலீசாகிறது என்றால், 3 நாளைக்கு முன் படத்துக்கான ரிசர்வேஷன் ஓப்பன் ஆகும். எந்தப் படத்தின் ட்ரெய்லர், போஸ்டர் உங்களுக்குப் பிடித்துள்ளதோ அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு நன்றாக இருந்தால் நாலு பேருக்கு சொல்லலாம். இன்னொரு படம் நன்றாக இருந்தால், உங்களிடம் பணம் இருந்தால் அதையும் போய் பார்க்கலாம். இவ்வளவு தான் அந்த சினிமாவுக்கு நீங்கள் செலவு பண்ண வேண்டிய நேரம். உங்கள் நேரத்தை உங்களைத் தவிர யாராலும் சிறப்பாக செலவிட முடியாது” எனத் தெரிவித்துள்ளார்