Watch Video:போட்டி போட்டு நடனம் ஆடும் பக் நாய்க்குட்டி ட்விட்டரில் வைரல்!
பக் எனப்படும் ஒரு வகை நாய்க்குட்டி அழகாக நடனமாடும் விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
பரபரவென ஓடிக்கொண்டிருக்கும் நாளை கொஞ்சம் நிறுத்தி, இந்த க்யூட் விடியோவை காண நேரம் ஒதுக்குங்கள். சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வரும் ஒரு வீடியோ ஒன்றில், ஒரு குட்டி பக் வகை நாய் குட்டி அதனை வளர்ப்பவருடன் போட்டி போட்டு நடனமாடுவதை பதிவு செய்திருக்கிறது. மனம் இறுக்கமாக இருப்பவர்கள் இந்த காணொளியை கண்டு ஆசுவாசம் அடைந்ததாக கூறுகின்றனர். அந்த அளவுக்கு மிகவும் அருமையாக அந்த குட்டி நாய் நடனமாடுகிறது. இது Buitengebieden என்னும் ட்விட்டர் கணக்கு மூலம் ட்விட்டரில் பகிறப்பட்டுள்ளது. இது 224 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை இதுவரை பெற்றுள்ளது.
Dance battle with a puppy.. pic.twitter.com/i73mqEp9lb
— Buitengebieden (@buitengebieden_) November 10, 2021
இப்போது வைரலாக பரவி கொண்டிருக்கும் வீடியோவில், நாய்க்குட்டிக்கு சுற்றி சுற்றி நடனமாதவதையும், அதை நக்கலடிக்கும் வகையில் ஒரு மனிதன் அதை போலவே செய்து சுட்டிக்காட்டுவதையும் காண முடிகிறது. அவருடைய குட்டி பக் வகையை சேர்ந்த நாய் அவன் செய்ததை அப்படியே செய்வதை காண முடிகிறது. "நாய்க்குட்டியுடன் நடனப் போர்" என்ற தலைப்புடன் இந்த வீடியோ வெளியிடப் பட்டுள்ளது.
Be careful 😮, you might step on ur tiny puppy😬
— bits (@navajobits) November 11, 2021
So cute pic.twitter.com/jvAgiLAa2P
— Steven Samples (@StevenSamples) November 10, 2021
Thank you God for puppies!
— Jay Withee (@JayWithee) November 10, 2021
May they always have humans who love them.
May they always have the upper hand over their humans to the max extent consistent with their own health and happiness.
this is the cutest thing i saw today😍
— Appy মল্লিক Kandwal (@Appi47931128) November 11, 2021
Such a clever precious one.🐶😍Careful getting too close to the tiny fur baby.
— Mea (@Manuela_MD) November 10, 2021
இந்த காணொளியை நெட்டிசன்கள் பலர் ரசித்து வருகின்றனர். இருப்பினும், நாய்க்குட்டிக்கு மிக அருகில் அந்த மனிதர் குதித்ததால், சில பயனர்கள் நாய்க்குட்டியை மிதித்து விடுவாரோ எனறு அதனை பற்றி கவலைப்படும் விதமாக ட்வீட் செய்து வருகின்றனர். "அழகாக இருக்கிறது, ஆனால் மிக நெருக்கமாக அந்த சிறிய நாய்க்குட்டியைச் சுற்றி குதிக்கிறார்" என்று ஒரு பயனர் கமெண்டில் எழுதியுள்ளார். "நாய்க்குட்டிகளை படைத்ததற்காக கடவுளுக்கு நன்றி! அவர்கள் எப்போதும் அவர்களை நேசிக்கும் மனிதர்களைக் கொண்டிருக்கட்டும். அவர்கள் எப்போதும் தங்கள் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை விட அதிகமான அளவிற்கு தங்களை வளர்க்கும் மனிதர்களுக்கும் தருகிறார்கள்" என்று மற்றொரு பயனர் கமென்டில் எழுதி உள்ளார்.