Thiruchitrambalam 2nd Single: பொயட் தனுஷ் லிரிக்ஸில் வெளியானது திருச்சிற்றம்பலம் 2 சிங்கிள்..!
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் திருசிற்றம்பலம் படத்தின் செகண்ட் லிரிக்கல் பாடல் வெளியாகியிருக்கிறது.
![Thiruchitrambalam 2nd Single: பொயட் தனுஷ் லிரிக்ஸில் வெளியானது திருச்சிற்றம்பலம் 2 சிங்கிள்..! Thiruchitrambalam Second Single Megham Karukkatha lyrical video out- Watch Thiruchitrambalam 2nd Single: பொயட் தனுஷ் லிரிக்ஸில் வெளியானது திருச்சிற்றம்பலம் 2 சிங்கிள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/15/e2c6751400c35b73bc5d9b459eb957111657894073_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் செகண்ட் லிரிக்கல் பாடல் வெளியாகியிருக்கிறது...
திருச்சிற்றம்பலம் படத்தின் செகண்ட் லிரிக்கல்
“மேகம் கருக்குதே பெண்ணே பெண்ணே” எனத்தொடங்கும் இந்தப்பாடலை, நடிகர் தனுஷ் எழுதியிருக்கிறார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்தப்பாடலுக்கு பீஸ்ட் படத்தில் ‘ஹலோ மிதி அபி போ’ ‘ஜாலியோ ஜிம்கானா’ உள்ளிட்ட பாடல்களுக்கு நடனம் வடிவமைப்பு செய்த ஜானி மாஸ்டர் இந்தப்பாடலுக்கு நடன வடிவமைப்பை மேற்கொண்டு இருக்கிறார். அது சம்பந்தமான மேக்கிங் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கின்றன.
நல்ல வரவேற்பை பெற்ற “ தாய்க் கிழவி” பாடல்
முன்னதாக இந்தப்படத்தில் இருந்து “ தாய்க் கிழவி” பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப்பாடலையும் தனுஷே எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழில் மாறன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தை குட்டி, யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் ‘தங்கமகன்’ படத்திற்கு தனுஷூம் அனிருத்தும் இணைந்து பணியாற்றுகின்றனர்.
இந்தத் திரைப்படத்தில் தனுசுடன் பிரகாஷ்ராஜ், நித்யாமேனன், பாரதிராஜா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்களை அண்மையில் வெளியிட்டது. இந்தப்படம் வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும், ஏபிபி ஆப்பிலும் பின் தொடரலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)