Thiruchitrambalam Collection: விடுமுறை முடிந்ததும் விழுந்த வசூல்... திணறும் தனுஷின் திருச்சிற்றம்பலம்!
Thiruchitrambalam Box Office Collection: தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தின் வசூல் குறித்தான அப்டேட் வெளியாகியுள்ளது.
தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தின் வசூல்(Thiruchitrambalam Box Office) குறித்தான அப்டேட் வெளியாகியுள்ளது.
தனுஷ் நடிப்பில் வெளியான "யாரடி நீ மோகினி", "உத்தம புத்திரன்", "குட்டி" உள்ளிட்ட படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் 4வது முறையாக அவருடன் இணைந்துள்ள படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தை தனுஷின் படிக்காதவன், மாப்பிள்ளை படங்களை தொடர்ந்து 3வது முறையாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தில் நடிகைகள் நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர்,ராஷி கண்ணா, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி திருச்சிற்றம்பலம் படம் வெளியானது.
View this post on Instagram
ஃபீல் குட் படமாக வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் குறித்தான விமர்சனங்களும் பாசிட்டிவாக வெளியானதால் அடுத்தடுத்த நாட்களில் தியேட்டருக்கு ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக செல்ல ஆரம்பித்தனர். இதனால் படத்தின் வசூலும் அதிகமாக தொடங்கியது.
பாக்ஸ் ஆபிஸ் வசூல் விபரம்
படம் வெளியாகி ஒரு வாரம் முடிந்த நிலையில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் உலக அளவில் 50 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் அப்டேட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.அந்த அப்டேட்டின் படி திருச்சிற்றம்பலம் படத்தின் வசூலானது குறைந்து நேற்று மட்டும் 4.16 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.
#Thiruchitrambalam TN Box Office
— Manobala Vijayabalan (@ManobalaV) August 23, 2022
PASSESS the crucial Monday test.
Day 1 - ₹ 9.52 cr
Day 2 - ₹ 8.79 cr
Day 3 - ₹ 10.24 cr
Day 4 - ₹ 11.03 cr
Day 5 - ₹ 4.16 cr
Total - ₹ 43.74 cr#Dhanush
மொத்தமாக தமிழ்நாட்டில் மட்டும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் 43.74 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.