தாறுமாறான டைட்டில்...மிரட்டலான செகண்ட் லுக் போஸ்டர்... அர்ஜூன் படத்தின் பெயரே மாஸ் தான்!
Theeyavar Kulaigal Nadunga : நடிகர் அர்ஜுன் பிறந்த நாளான இன்று "தீயவர் குலைகள் நடுங்க" படத்தின் செகண்ட் லுக் போஸ்ட்டரை தற்போது வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.
![தாறுமாறான டைட்டில்...மிரட்டலான செகண்ட் லுக் போஸ்டர்... அர்ஜூன் படத்தின் பெயரே மாஸ் தான்! Theeyavar Kulaigal Nadunga second look poster is released today தாறுமாறான டைட்டில்...மிரட்டலான செகண்ட் லுக் போஸ்டர்... அர்ஜூன் படத்தின் பெயரே மாஸ் தான்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/15/41bfa396621745c114ac5d84d529a9241660576775327224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Theeyavar Kulaigal Nadunga : அர்ஜுனின் ஸ்டைலிஷ் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது - "தீயவர் குலைகள் நடுங்க"
ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் க்ரைம், திரில்லர் திரைப்படம் "தீயவர் குலைகள் நடுங்க" படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
இன்வெஸ்டிகேஷன் நிறைந்த திரில்லர் கதை :
ஜிஎஸ் ஆர்ட்ஸ் பேனரின் சார்பில் அருள் குமாரின் தயாரிப்பில் தினேஷ் லெட்சுமணன் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "தீயவர் குலைகள் நடுங்க". இது ஒரு க்ரைம் திரில்லர் கலந்த இன்வெஸ்டிகேஷன் பற்றிய கதை. கொடூரமாக நடைபெறும் கொலைகளை பற்றியும் அதன் பின்னணியில் இருக்கும் க்ரைம் பற்றியும் த்ரில்லிங்காக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் இது என கூறப்படுகிறது.
செகண்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது :
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்னர் தான் வெளியானது அதனை தொடர்ந்து நடிகர் அர்ஜுன் பிறந்த நாளான இன்று இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்ட்டரை தற்போது வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். ஆக்ஷன் கிங் நடித்த "மங்காத்தா" திரைப்படத்தை இயக்கிய வெங்கட் பிரபு நடிகர் அர்ஜுனின் ஸ்டைலிஷான செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். பரத் ஆசீவகன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் பணிகளையும் அருண்சங்கர் துரை களை இயக்கம் பணிகளையும் செய்துள்ளனர். "தீயவர் குலைகள் நடுங்க" படத்தின் வசனங்களை எழுதியுள்ளார் ராஜசேகர்.
A very happy bday #actionking!! Here is the Second look of @gsartsoffl #GArulKumar's #TheeyavarKulaigalNadunga#தீயவர்குலைகள்நடுங்க #TKNSecondLook#HBDactionking @akarjunofficial @aishu_dil @off_dir_Dinesh @GkReddy1939 @praveenraja0505 pic.twitter.com/jhHUPncHle
— venkat prabhu (@vp_offl) August 15, 2022
இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் :
ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் ஒரு ஆசியராக நடித்துள்ளார் மற்றும் அப்பள்ளியில் நடக்கும் ஒரு சம்பவத்தை விசாரிக்கும் அதிகாரியாக அர்ஜுன் நடித்துள்ளார். அங்கு நடந்த சம்பவத்தை மையமாக வைத்து எப்படி அந்த வழக்கை பரபரப்பாக நகர்த்தி செல்கிறார்கள் என்பது தான் திரைக்கதை. மேலும் இப்படத்தில் குழந்தைகளுக்கு இருக்கும் ஆட்டிசம் குறித்து பேசப்பட்டுள்ளது. படத்தின் வெளியீடு நீண்ட நாட்களாக தாமதப்பட்டு வந்த நிலையில் "தீயவர் குலைகள் நடுங்க" படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என தகவல் தெரிவித்துள்ளனர். இருப்பினும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)