மேலும் அறிய

Samantha India Day Parade:சமந்தா நியூயார்க் போறாங்க.. என்ன காரணம் தெரியுமா... மகிழ்ச்சியில் ரசிகர்கள்

சமந்தா நியூயார்க் செல்வதற்கான உண்மையான காரணத்தை அறிந்த அவரின் ரசிகர்கள் பெருமிதத்தில் இருகின்றனர்.

சமந்தா ரூத் பிரபு தென்னிந்தியத் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஆவார். அவர் சினிமாத்துறையில் தனது நடிப்புத் திறனை நிலைநாட்டியுள்ளார். தற்போது நடிகை சமந்தாவிற்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. 41-வது உலகின் மிகப்பெரிய இந்திய தின அணிவகுப்புக்கு தலைமை தாங்கும் அரிய வாய்ப்பு சமந்தாவுக்கு கிடைத்துள்ளது. இந்த விழாவில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸும் கலந்து கொள்கிறார். நியூயார்க்கில் சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக இந்த அணிவகுப்பு நடத்தப்படும். இந்தியாவின் சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20 -ஆம் தேதி நியூயார்க்கில் இந்திய கூட்டமைப்பு, இந்திய அணிவகுப்பை நடத்துகிறது.

கடந்த ஆண்டு நியூயார்க்கில் நடந்த இந்திய தின அணிவகுப்புக்கு அல்லு அர்ஜுன் தலைமை தாங்கிய நிலையில் இந்த ஆண்டு, சமந்தா தலைமை தாங்க உள்ளார்.  ஹைதராபாத்தில் இருந்து , இப்போது நியூயார்க் வரை சமந்தா தொடர்ந்து சரித்திரம் படைத்து வருகிறார். பான்-இந்தியா அளவில் அதிக சம்பளம் பெறக்கூடிய நட்சத்திரங்களில் ஒருவராகக் கருதப்படும் சமந்த உலகின் மிகப் பெரிய இந்திய அணிவகுப்புக்கு தலைமை தாங்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.  

ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியின்படி,  சமந்தா சிறிது காலம் NYC இல் இருப்பார். அவர் மயோசிடிஸ்  நோய்க்கு சிகிச்சை பெற்று மீண்டும் திரும்பி வருவார் என கூறப்படுகிறது. அவர் தனது உடல்நலத்திற்கு மட்டுமல்லாது, வேலைக்கும் சமமாக முன்னுரிமை அளித்து வருகிறார்.  சமந்தா ரூத் பிரபு, நியூயார்க் நகருக்குச் செல்வதற்கு முன், குஷியின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா இணைந்து படத்தின் டைட்டில் பாடலுக்கு ஒன்றாக நடனமாடியது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

சாகுந்தலம் ரிலீஸ் தொடங்கி, குஷி மற்றும் சிட்டாடல் ஆகிய படங்களின் படப்பிடிப்பிற்கான விளம்பரங்கள் தொடங்கி, சமந்தா ஒரு வருடத்தை இடைவேளையின்றி பிஸியாகக் கழித்தார். புதிய படபிடிப்புகளில் பங்கேற்பதற்கு முன்பு தனது உடல்நிலையில் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஷிவா நிர்வாணா எழுதி இயக்கிய குஷி திரைப்படம், தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட பதிப்புகளுடன் தெலுங்கிலும் செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாகிறது. 

இப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். குஷி படத்தின் படப்பிடிப்பின் போது மயோசிடிஸ் நோய்க்கு உள்ளான சமந்தா பெரிய போராட்டத்தை சந்தித்ததாக விஜய் தேவரகொண்டார் ஏற்கனவே நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.  இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் இந்த படம் உருவாகி இருந்தாலும் இந்த படத்தின் வெற்றி சமந்தாவிற்கு புகழையும் மன மகிழ்ச்சியையும் பெற்றுத்தரும் என்ற எதிர்பார்ப்பில் அவரின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

மேலும் படிக்க

Bahubali Elephant : பொம்மை யானையுடன் சண்டையிட்ட ’பாகுபலி’ யானை ; அச்சமடைந்த வனக்கல்லூரி மாணவர்கள்..

Chandrayaan 2 Vs Luna 25: சந்திரயான் 2-ஐ போலவே வீழ்ந்த ரஷ்யாவின் லூனா 25: என்ன ஒற்றுமை? சுவாரஸ்ய தகவல்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: 13 மாவட்டங்களில் கனமழை - இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழு லிஸ்ட் இதோ..!
TN Rain Update: 13 மாவட்டங்களில் கனமழை - இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழு லிஸ்ட் இதோ..!
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்...  கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்... கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Survey On TVK : ‘’விஜய் தான் பெரிய MINUS’’.. DMK எடுத்த சீக்ரெட் சர்வே! வெளியான மெகா ட்விஸ்ட்TVK Vijay : ”2026-ல் விஜய் முதலமைச்சர்! என்.டி.ஆர் பாணியில் வெற்றி” வெளியான மெகா சர்வே!Trichy Suriya on Annamalai | Bussy Anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: 13 மாவட்டங்களில் கனமழை - இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழு லிஸ்ட் இதோ..!
TN Rain Update: 13 மாவட்டங்களில் கனமழை - இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழு லிஸ்ட் இதோ..!
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்...  கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்... கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Seeman: விமானத்தில் சிக்கிய சீமான்; கனமழையால் தரையிறங்க முடியாமல் விமானம் தவிப்பு.!
Seeman: விமானத்தில் சிக்கிய சீமான்; கனமழையால் தரையிறங்க முடியாமல் விமானம் தவிப்பு.!
Poondi Dam: சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
Embed widget