Kamalhaasan : நிறைய நடிகர்களை உருவாக்குவேன்.. இந்தியன் 2 ப்ரோமோஷனில் கலங்கடித்த கமல்
என்னை மாதிரி இன்னும் நிறைய நடிகர்களை உருவாக்குவது தான் என்னை ஸ்டாராக்கிய மக்களுக்கு நான் செய்யும் நன்றிக்கடன் என்று கமல்ஹாசன் பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது
இந்தியன் 2
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து ஷங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2 படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா, பாபி சிம்ஹா, விவேக், ஆர்த்தியாக பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி, காளிதாஸ் ஜெயராம், இன்ஸ்பெக்டராக நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், மனோபாலா, ஜெகன், தம்பேஷ், குல்ஷன் குரோவர், ஜாகீர் உசேன், பியூஷ் மிஸ்ரா, பியூஷ் மிஸ்ரா மிஸ்ரா, ஜெயபிரகாஷ், ஜி. மாரிமுத்து, ஜார்ஜ் மேரியன், வினோத் சாகர், யோகராஜ் சிங், ரேணுகா, கல்யாணி நடராஜன், சி. ரங்கநாதன், பெனடிக்ட் காரெட், ரவி வெங்கட்ராமன், சேரன்ராஜ், மற்றும் டெமி-லீ டெபோ உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
அனிருத் இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
இந்தியன் 2 டிக்கெட் விற்பனை
*Indian 2 First Day Advance Booking Report (Update 3/9) #Indian2 https://t.co/IRlh4Ia70W*
— Sacnilk Entertainment (@SacnilkEntmt) July 10, 2024
தமிழ் , தெலுங்கு , இந்தி , மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்தியன் 2 படம் வெளியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்தியன் 2 படத்திற்கான முன்பதிவுகள் கடந்த ஜூலை 8 ஆம் தேதி தொடங்கியது.
தமிழகத்தில் மட்டும் முன்பதிவுகளில் இந்தியன் 2 படம் 3 கோடி வரை வசூலித்துள்ளது. இந்திய அளவில் இதுவரை 98,000 ஆயிரம் டிக்கெட்கள் விற்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில் வெளிநாடுகளில் இந்தியன் 2 படத்திற்கான டிக்கெட் விற்பனையும் அதிகரித்துள்ளது
கலங்கடித்த கமல்
If this makes you cry, you are not alone 😭
— Nammavar (@nammavar11) July 10, 2024
Just #Ulaganayagan things#KamalHaasan#Indian2pic.twitter.com/PYJUO4VxEE
படம் வெளியாக இன்னும் இரண்டே நாட்கள் இருக்கும் நிலையிலும் கூட படக்குழு ப்ரோமோஷன் வேலைகளை தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் தெலங்கானாவில் இந்தியன் 2 படக்குழு ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர் . இந்த நிகழ்ச்சியில் கமல் உணர்ச்சிகரமாக பேசியது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய கமல் “இத்தனை ஆண்டுகள் நீங்கள் என்னை ஒரு ஸ்டாராக வைத்திருக்கிறீர்கள். என்னைப் போன்ற நிறைய நடிகர்களை உருவாக்குவது மட்டுமே நான் உங்களுக்கு செய்யக்கூடிய ஒரே நன்றிக்கடன்“ என்று கமல் பேசினார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.