This Week OTT release: பூமர் அங்கிள் முதல் மைதான் வரை... இந்த வார ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
This week OTT release : இந்த வாரம் வெள்ளிக்கிழமை ( ஜூன் 7 ) ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களின் பட்டியல்.
ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் திரையரங்குகளில் வெளியாவது இல்லாமல் ஓடிடியிலும் சில படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கும் படங்களை பற்றி பார்க்கலாம்.
வசந்த் ரவி நடித்துள்ள வெப்பம், விதார்த் நடிப்பில் அஞ்சாமை, மோகன் நடித்துள்ள ஹரா உள்ளிட்ட திரைப்படங்கள் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் ஒரு சில படங்கள் திரையரங்குக்கு பிறகான டிஜிட்டல் தளத்தில் வெளியாக உள்ளது. அப்படி ஓடிடி வெளியாக இருக்கும் படங்கள் என்னென்ன.
பூமர் அங்கிள் :
எம்.எஸ். ஸ்வதேஷ் இயக்கத்தில் யோகி பாபு, ஓவியா, தங்கதுரை, பாலா, சேசு, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரின் நடிப்பில் காமெடி கலந்த திரில்லர் படமாக வெளியானது பூமர் அங்கிள். எந்தவித லாஜிக்கும் பார்க்காமல் நகைச்சுவையை மட்டுமே எதிர்பார்க்கும் மக்களுக்கு மிகவும் பொருத்தமான ஒரு திரைப்படம். கடந்த மார்ச் மாதம் வெளியான இப்படம் ஆஹா/சிம்ப்லி சவுத் ஓடிடி தளத்தில் நாளை (ஜூன் 7 ) வெளியாக உள்ளது.
105 மினிட்ஸ் :
ராஜு துசா இயக்கத்தில் ஹன்சிகா மோத்வானியின் சிங்கிள்-ஷாட் த்ரில்லர் திரைப்படம் ஜூன் 7ம் தேதி ஆஹா தளத்தில் வெளியாக உள்ளது.
மிரள்:
பரத், வாணி போஜன் நடிப்பில் 2022ம் ஆண்டு வெளியான 'மிரள்' திரைப்படத்தின் தெலுங்கு டப்பிங் ஜூன் 7ம் தேதியன்று ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
மைதான் :
இந்திய தேசிய கால்பந்து அணியின் பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து அஜய் தேவ்கன், பிரியாமணி, நிதானஷி கோயல் உள்ளிட்ட படேலின் நடிப்பில் வெளியான 'மைதான்' திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணலாம்.
வர்ஷங்களுக்கு ஷேஷம் :
வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால், வினீத் ஸ்ரீனிவாசன், நிவின் பாலி உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான 'வர்ஷங்களுக்கு ஷேஷம்' திரைப்படம் ஜூன் 7ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
படே மியான் சோடே மியான் :
அலி அபாஸ் இயக்கத்தில் அக்ஷய் குமார், டைகர் ஷெரப் என இரண்டு அக்ஷன் ஹீரோக்கள் நடித்த இப்படம் நெட்ஃப்ளிக்ஸில் ஜூன் 7ம் தேதி வெளியாக உள்ளது.