மேலும் அறிய

Subbalakshmi Passes Away: 66 வயதில் நடிகையாக அறிமுகம்! சுதந்திரத்திற்கு முன்பு பிறந்த பன்முக கலைஞர் சுப்புலட்சுமி!

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் நடிகை சுப்புலட்சுமி காலமானார்.

கேரளாவில் 1936 ஆம் ஆண்டு, ஏப்ரல் 21-ல் பிறந்த ஆர்.சுப்பலட்சுமி,  திருவனந்தபுரத்தில் உள்ள ஜவஹர் பாலபவனில் இசைக்கலைஞராகவும் நடனப் பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றி வந்தார். பின்னர் 1951 -ஆம் ஆண்டு முதல் அகில இந்திய வானொலியில் பணிபுரிந்தார். அகில இந்திய வானொலியில் பணியாற்றிய தென்னிந்தியாவைச் சேர்ந்த முதல் பெண் இசைக்கலைஞர் என்ற சாதனையையும் ஆர்.சுப்புலட்சுமி படைத்தார்.

காலமானார்:

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகை சுப்புலட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அவர் உயிர் பிரிந்தது. மலையாள திரையுலகை சேர்ந்த பலரும் தங்கள் இரங்கல்களை அவரது குடும்பத்தாருக்கு தெரிவித்து வருகின்றனர். சிறந்த நடிகையாக மட்டுமல்லாமல், அவர் ஒரு சிறந்த பாடகியாகவும் திகழ்ந்து வந்தார். 

சிறந்த பாடகி மற்றும் இசையமைப்பாளரான இவர், பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் நடித்த நந்தனம் படத்தின் மூலம் திரையுலகில், தனது 66-வது வயதில் அறிமுகமானார். மேலும் கல்யாணராமன், ராப்பகல், திலகம், சிஐடி மூசா, பாண்டிப்படா, ராணி பத்மினி மற்றும் பல வெற்றிப்படங்களில் அவர் நடித்துள்ளார். 

பலமொழி படங்கள்:

மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில், பிரபல இயக்குனர் கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். அதே போல இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்திலும் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

சிறுவயதிலிருந்தே கலைகளில் தீவிரமாக ஆர்வம் கொண்டிருந்த அவர், அகில இந்திய வானொலியில் (AIR) பணியாற்றி, அங்கிருந்து ஓய்வு பெற்ற பிறகு திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். 2002ம் ஆண்டு வெளியான ஒரு விளம்பர படம் தான் அவர் நந்தனம் திரைப்படத்தில் இணைய அவருக்கு வாய்ப்பளித்தது. 

தனது 66-வது வயதில் முதன்முறையாக பிருத்விராஜ் நடித்த நந்தனம் திரைப்படத்தின் மூலம் ஆர்.சுப்புலட்சுமி வெள்ளித்திரையில் நுழைந்தார். இந்தப் படத்திற்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் அதிக அளவில் வரத்தொடங்கின, இந்தி படங்களிலும் அவர் நடித்துள்ளார். குறிப்பாக இந்தியில் வந்த தில் பெச்சாராவில், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பாட்டியாக ஒரு படத்தில் நடித்திருந்தார். சுப்பலட்சுமி தொலைக்காட்சி நடிகராகவும் இருந்தார், தூர்தர்ஷன் உட்பட பல சேனல்களில் ஒளிபரப்பான சீரியல்களில் அவர் நடித்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“நான் ருத்ராட்சம் போட்டுருக்கேன்” - பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கோர்ட்டில் வைத்த வாதம்!
“நான் ருத்ராட்சம் போட்டுருக்கேன்” - பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கோர்ட்டில் வைத்த வாதம்!
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arvind Kejriwal Car Attack : ’’பாஜகவின் கொலை முயற்சி!’’கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு! - ஆம் ஆத்மிCongres Tvk Alliance : விஜயை அழைத்த காங்கிரஸ்! நம்பிக்கையா? அவநம்பிக்கையா? பகீர் கிளப்பும் பாஜக!Bussy Anand Inspection on Parandur : விஜய் போட்ட ப்ளான்.. பரந்தூர் போன புஸ்ஸி! 5 ஏக்கர் ரெடி!Bomb Saravanan: ”Armstrong கொலைக்கு பழிதீர்ப்பேன்”ஸ்கெட்ச் போட்ட பாம் சரவணன்!சுட்டுப்பிடித்த POLICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“நான் ருத்ராட்சம் போட்டுருக்கேன்” - பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கோர்ட்டில் வைத்த வாதம்!
“நான் ருத்ராட்சம் போட்டுருக்கேன்” - பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கோர்ட்டில் வைத்த வாதம்!
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
பொங்கல் பண்டிகைக்கு பல கோடிக்கு மது விற்பனை; புள்ளிவிவரத்தை எடுத்துவிட்ட அன்புமணி
பொங்கல் பண்டிகைக்கு பல கோடிக்கு மது விற்பனை; புள்ளிவிவரத்தை எடுத்துவிட்ட அன்புமணி
Special Train from Mandapam; பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
Delhi Election; கெஜ்ரிவால் அறிவிப்பால் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு ஜாக்பாட்...
டெல்லி தேர்தல் ; கெஜ்ரிவால் அறிவிப்பால் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு ஜாக்பாட்...
இதை எந்த அரசாலும் செய்ய முடியாது! எது சாத்தியமோ அதை செய்வோம் - கனிமொழி சொல்வது என்ன?
இதை எந்த அரசாலும் செய்ய முடியாது! எது சாத்தியமோ அதை செய்வோம் - கனிமொழி சொல்வது என்ன?
Embed widget