The Legend Release: இது வேற லெவல் பிரமாண்டம்..லெஜண்ட் படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் விக்ரம் பட டிஸ்ரிபியூட்டர்..!
லெஜண்ட் சரவணன் நடிக்கும் 'தி லெஜண்ட்' படத்தை பிற நாடுகளில் உள்ள திரையரங்குகளில் வெளியிடும் உரியைமை விக்ரம் திரைப்படத்தை விநியோகம் செய்த ஏபிஐ நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.
லெஜண்ட் சரவணன் நடிக்கும் 'தி லெஜண்ட்' படத்தை பிற நாடுகளில் உள்ள திரையரங்குகளில் வெளியிடும் உரிமையைவிக்ரம் திரைப்படத்தை விநியோகம் செய்த ஏபிஐ நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.
#TheLegendSaravanaStoresProduction Is Happy to be Associated with @APIfilms for #TheLegendSaravanan Starring #TheLegend for Entire Worldwide Excluding India Theatrical Release #TheLegend #TheLegendFromJuly28@jdjeryofficial @Jharrisjayaraj pic.twitter.com/HdYW9t9c2f
— Nikil Murukan (@onlynikil) July 11, 2022
லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் நடித்துள்ள 'தி லெஜண்ட்' திரைப்படம் வருகிற ஜுலை 15 ம் தேதி வெளியாகும் என படக்குழு தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் மிகவும் பிரபலன ஜமாவுளிக்கடைகளில் ஒன்றாக திகழ்வது சரவணா ஸ்டோர்ஸ். லெஜண்ட் சரவணா ஸ்டோர்சின் உரிமையாளரான லெஜண்ட் சரவணன் கடந்த சில ஆண்டுகளாக தனது கடைக்கான விளம்பரங்களுக்கு தானே நடித்தார். இதன்மூலம் அவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார்.
பின்னர், நடிப்பின் மேல் ஆசை கொண்ட அவர் 'உல்லாசம்' படத்தை இயக்கிய ஜேடி – ஜெர்ரி என்ற இரட்டை இயக்குனர்களின் இயக்கத்தில் தி லெஜண்ட் என்ற படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் டிரைலர் 29 மில்லியன் பார்வைகளையும், மொசலோ மொசலு பாடல் 14 மில்லியன் மற்றும் வாடிவாசல் பாடல் 18 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது. இந்நிலையில் 'தி லெஜண்ட்' படத்தை தமிழகம் எங்கும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் கோபுரம் சினிமாஸ் சார்பாக ஜிஎன் அன்புச்செழியன் வெளியிடுகிறார். இந்தியாவை தவிர்த்து பிற நாடுகளில் படத்தை வெளியிடும் உரிமையை ஏபிஐ ஃபிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. முன்னதாக இந்த நிறுவனம் கமல் நடித்த விக்ரம் பட விநியோகத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்