The Kerala Story: தொடர் எதிர்ப்புகள்... தமிழ்நாடு முழுவதும் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் காட்சிகள் ரத்து..!
தமிழ்நாட்டில் எழுந்து வந்த தொடர் எதிர்ப்புகள் காரணமாக மாநிலம் முழுவதும் தி கேரளா ஸ்டோரி படத்தின் காட்சிகள் அனைத்தும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆம் தேதியான வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் பல்வேறு எதிப்புகளின் காரணத்தினால் இன்று தமிழ்நாட்டில் திரையிடப்பட இருந்த காட்சிகள் ரத்து செய்யப் பட்டன.
தி கேரளா ஸ்டோரி:
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடந்த 5 ஆம் தேதி வெளியானது. இந்த படத்தை வெளியிடுவதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கடு எதிர்ப்புகள் தெரிவிக்கப் பட்டது. இந்நிலையில் தமிழ் நாட்டிலும் இந்தப் படத்தை வெளியிடுவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் மட்டுமே இந்தப் படம் திரையிடப் பட்டு வந்த நிலையில் கடும் எதிர்ப்பின் காரணத்தால் இன்று தமிழ்நாட்டில் திரையிடப்பட இருந்த கேரளா ஸ்டோரியின் அனைத்துக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியிருக்கு படம் தி கேரளா ஸ்டோரி. சில வாரங்களுக்கு முன் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியிடப் பட்டது. இந்த ட்ரெய்லரில் கேரளாவில் மொத்தம் 33, 000 பெண்கள் வலுக்கட்டாயமாக இஸ்லாமியத்திற்கு மதமாற்றம் செய்யப் பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்க்கப் பட்டதக கூறப்பட்டது.இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. கேரள முதலைம்மசர் பினராய் விஜயன் கேரளா ஸ்டோரி இனபாகுபாட்டை முன்னிறுத்தி வெறுப்பு பிரச்சாரம் செய்வதாக இந்தப் படத்தை விமர்சித்திருந்தார். கடும் எதிர்பார்ப்புகளுக்கு பிறகு ட்ரெய்லரில் வெளியான இந்த 33,000 பெண்கள் என இருந்த தகவல் 3 பெண்கள் என மாற்றப் பட்டது.
தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்:
கேரளா ஸ்டோரி படத்தை இயக்கிய சுதிப்தா சென் மொத்தம் 33,000 பெண்கள் காணாமல் போனதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்தார். ஆனால் அதற்கான எந்த ஆதாரங்களையும் அவர் சமர்பிக்கவில்லை. கடந்த 2011 ஆம் ஆண்டு கேரள முதலமைச்சராக இருந்த உம்மன் சாண்டி வருடந்தோறும் 2800 முதல் 3200 பெண்கள் இஸ்லாமியத்திற்கு மதமாற்றம் செய்யப் படுவதாக அறிக்கை வெளியிட்டார் என்றும் அன்றிலிருந்து தான் இந்த பிரச்சனையை தீவிரமாக கவணித்து வருவதாகவும் சுதிப்தோ சென் தெரிவித்தார். ஆனால் இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட தகவல்படி அப்படியான எந்த அறிக்கையும் வெளியிடப் படவில்லை.கேரளா ஸ்டோரி திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டது.ஆனால் நீதிமன்றம் படத்தின் மீது தடை விதிக்க மறுத்துவிட்டது.
இத்த்னை எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே ஐந்தாம் தேதி வெளியானது கேரளா ஸ்டோரி. படத்தைக் குறித்து கலவையான விமர்சனங்கள் தெரிவிக்கப் பட்டது.ஒரு தரப்பு படத்தில் பிரச்சனைக்குரிய கருத்துகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப் பட்டது மற்றொரு புறம் படம் வெறுப்பு பிரச்சாரம் செய்வதாக விமசிக்கப் பட்டது.தற்போது தமிழ்நாட்டில் இந்த படம் திரையிடுவதற்கு பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றன மக்கள்