மேலும் அறிய

Suriya : அஜித் இல்ல விஜய் இல்ல...சூர்யா தான் கஷ்டம்.. இயக்குநர் வெங்கட் பிரபு ஓபன் டாக்

விஜய் அஜித் சூர்யா ஆகிய மூவரில் நடிகர் சூர்யாவுடன் பணியாற்றுவது தான் மிக சவாலானது என தி கோட் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்

தி கோட் 

சென்னை 28 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் வெங்கட் பிரபு . தொடர்ந்து கோவா , சரோஜா  உள்ளிட்ட படங்களின் வழி தனக்கென ஒரு தனித்துவமான பாணியை உருவாக்கி ரசிகர்களை கவர்ந்தார். சிறிய பட்ஜெட்டில் சின்ன சின்ன நடிகர்களை வைத்து காமெடி ஜானரில் படங்களை இயக்கிவந்த வெங்கட் பிரபு தன்னால் பெரிய ஸ்டார்களை வைத்து மாஸான படங்களையும் கொடுக்க முடியும் என நிரூபித்தது மங்காத்தா படம். தொடர்ந்து சூர்யாவுடன் மாஸ் என்கிற மாஸிலாமணி  தற்போது விஜயின் தி கோட் படத்தை இயக்கியுள்ளார் வெங்கட் பிரபு. அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் படத்தை இயக்கவிருப்பதாகவும் வெங்கட் பிரபு சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

சூர்யாவுடன் வேலை செய்வது தான் சவாலானது

தி கோட் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பேசிய வெங்கட் பிரபு விஜய் அஜித்தைக் காட்டிலும் சூர்யாவுடன் வேலை செய்வது தான் அதிக சவாலான வேலை என்று தெரிவித்துள்ளார். “விஜய் அஜித்திடம் கூட ஒரு படத்தின் ஒன்லைன் சொல்லி நான் சம்மதம் வாங்கிவிட்டேன் , ஆனால் சூர்யாவிடம் நான் நிறைய கதைகளை சொல்ல வேண்டியதாக இருந்தது. சூர்யா திரைக்கதையில் மிக அதிக கவனம் செலுத்தக்கூடிய ஒரு நபர். அதனால் ஒரு கதையை அவரிடம் சொல்லி அவருடைய சம்மதம் வாங்குவது என்பது சவாலான ஒரு காரியம். ஆனால் திரைக்கதையில் எல்லா திருத்தங்களையும் செய்துவிட்டால் அதற்குபிறகு அவர் கதையில் தலையிடமாட்டார். நீங்கள் என்ன கேட்டாலும் அதை நடித்து கொடுப்பார். “ என்று வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். 

தி கோட்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் தி கோட். எ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மோகன், மீனாக்‌ஷி செளதரி, வைபவ் , பிரேம்ஜி , ஜெயராம் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தி கோட் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு துவங்கியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget