Actor Vishal: விஷால் அளித்த புகார் மீது அதிரடி நடவடிக்கை: வசமாக சிக்கும் 3 பேர் - சிபிஐ-ன் அடுத்தகட்ட மூவ்!
’மார்க் ஆண்டனி' படத்தை தணிக்கை செய்ய மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக விஷால் கூறிய புகாரில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
’மார்க் ஆண்டனி' படத்தை தணிக்கை செய்ய மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக விஷால் கூறிய புகாரில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. விஷால் அளித்த புகார் தொடர்பாக, 3 இடைத்தரகர்கள் மற்றும் பெயர் குறிப்பிடாத சென்சார் போர்டு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
மார்க் ஆண்டனி:
இளம் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி உலகமெங்கும் வெளியான படம் 'மார்க் ஆண்டனி'. விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரித்து வர்மா, சுனில் வர்மா, செல்வராகவன், ஒய்.ஜி.மகேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார். போன் மூலம் டைம் டிராவல் என்ற விஷயத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட மார்க் ஆண்டனி ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழ், தெலங்கில் வெளியான மார்க் ஆண்டனி படம், 100 கோடி ரூபாய் வசூலை பெற்றது. இந்நிலையில் செப்டம்பர் 27ஆம் தேதி ட்விட்டரில் மத்திய சென்சார் போர்டு அதிகாரிகள் மீது பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றை விஷால் முன்வைத்தார்.
விஷால் பரபர புகார்:
அதன்படி, "மார்க் ஆண்டனி படத்தின் இந்தி வெர்ஷன் சென்சாருக்காக CBFC அலுவலகத்தில் ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறினார். மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் முதலில் ரூ.3 லட்சம் வரை லஞ்சம் கேட்டனர். மேலும் சான்றிதழ் வழங்க ரூ.3.5 லட்சம் பணம் கேட்டனர். எனது கேரியரில் இப்படியான ஒரு நிலையை சந்தித்ததில்லை. தான் மேனகா என்ற இடைத்தரகரிடம் மொத்தம் ரூ.6.5 லட்சம் ரூபாய் பணத்தை இரண்டு தவணைகளாக கொடுத்தேன். அதன் பிறகே 'மார்க் ஆண்டனி' படத்தை இந்தியில் வெளியிட்டேன்” என நடிகர் விஷால் கூறியிருந்தார். இந்த புகார், திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சிபிஐ வழக்குப்பதிவு:
மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக விஷால் கூறிய புகாரில் தற்போது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அதன்படி, இடைத்தரகர்களாக செயல்பட்ட மெர்லின் மேனகா, ஜீஜா ராமதாஸ், ராஜன் ஆகியோர் மீதும், தணிக்கைச் சான்று அமைப்பு ஊழியர்கள் சிலர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்தினர். அப்போது, வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் படிக்க