Tirupati Temple: திருப்பதி: வரும் 15-ஆம் தேதி முதல் நவராத்திரி பிரம்மோற்சவம்: கூட்டத்தை கட்டுப்படுத்த தேவஸ்தானம் எடுத்த முடிவு
வரும் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 9 நாட்களுக்கு நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.
ஆண்டுதோறும் திருமலை திருப்பதி கோயிலில் பெருமாளுக்கு பல உற்சவங்கள் நடைபெரும். அதில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுவது வைகுண்ட ஏகாதசி மற்றும் பிரம்மோற்சவம் தான். குறிப்பாக புரட்டாசி மாதம் வரும் திருவோண நட்சத்திரத்தில் வெங்கடாஜலபதி பிறந்தநாள் அனுசரிக்கப்படுவதால் அந்த மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. திருமலையில் இருக்கும் திருவேங்கடமுடையான் பிரம்மதேவருக்கு தனக்கு உற்சவம் நடத்த சொல்லிக் கேட்டதாகவும், அதன்படி பிரம்மதேவர் நடத்தும் உற்சவம் என்பதால் பிரம்மோற்சவம் என அழைக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் கூடுதல் சிறப்பு என்னவென்றால், இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு செபடம்பர் 18 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கருடகொடியேற்றத்துடன் புரட்டாசி மாத பிரம்மோற்சவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வரும் அக்டோபர் 15 ஆம் தேதி நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.
வழக்கமாக பிரம்மோற்சவத்தின் போது தினசரியும் காலையும் மாலையும் மலையப்பசுவாமி நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து அருள்பாலிப்பார். பிரம்மோற்சவ வீதி உலாவின் போது வாகனங்களுக்கு சற்று முன்பாக பிரம்ம ரதம் என்று சிறிய தேர் இழுத்துச் செல்லப்படும். பிரம்மா இந்த தேரில் அமர்ந்து, பெருமாள் வீதியுலா வரும் மாடவீதிகளை சோதித்துப் பார்ப்பதாக ஐதீகம். அதன் பிறகே பெருமாள் இருக்கும் வாகனம் வீதியுலா செல்லும். இந்த வழக்கம் திருப்பதியில் மட்டுமே உள்ளது. மற்ற கோயில்களில் சீவேலி என்ற சிரிய பல்லக்கில் சக்கரத்தாழ்வார் விற்றிருப்பார் அந்த வாகனம் தான் பெருமாள் அவதார வாகனத்திற்கு முன் செல்லும்.
இவ்விரு விழாக்களின் போதும் வாகன புறப்பாடு அந்தந்த நாட்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால் நவராத்திரி பிரம்மோற்சவத்தின்போது திருக்கொடி ஏற்றம், திருக்கொடி இறக்கம், மரத்தாலான பெரிய தேரோட்டம் ஆகியவை நடைபெறாது. எனினும் இவ்விழாவும் ஒன்பது நாட்களே நடைபெறுகிறது. ஆனால் அதேசமயம் தங்கத் தேரோட்டம் மட்டும் நடைபெறும். பிரம்மோற்சவ விழாவின் 5 வது நாள் கருட வாகனம் நடைபெறும். இந்த கருட வாகனத்தை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்வார்கள்.
புரட்டாசி மாதம் வழக்கமாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும், அதிலும் புரட்டாசி சனிக்கிழமையின் போது லட்சக்கணக்கான மக்கள் பெருமாளை தரிசனம் செய்ய வருவார்கள். புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் இந்த மாதம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக தான் இருக்கும். கடந்த இரண்டு சனிக்கிழமையின் போது பக்தர்கள் கூட்டம் கட்டுப்படுத்தப்பட முடியாத நிலையில் இருந்தது. இதனால் அடுத்து வரும் 3 மற்றும் 4 வது சனிக்கிழமைகளில் கூட்டத்தை ஓரளவு கட்டுப்படுத்த வரும் 6, 7, 8, 13,14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் திருப்பதியில் விநியோகம் செய்யப்படும் சர்வ தரிசன டோக்கன்களை நிறுத்தி வைப்பது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Leo Trailer: நான் ரெடிதான்..! இன்று வெளியாகிறது விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவான ”லியோ” ட்ரெய்லர்