Grammy Award sakti: இசைத்துறையின் பெரும் அந்தஸ்து, கிராமி விருதை வென்ற சங்கர் மகாதேவனின் சக்தி இசைக்குழு
Grammy Award sakti: இந்தியாவைச் சேர்ந்த சக்தி இசைக்குழு, சிறந்த ஆல்பம் பிரிவில் கிராமி விருதை வென்று அசத்தியுள்ளது.
Grammy Award: சிறந்த குளோபல் மியூசிக் ஆல்பம் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த, சக்தி இசைக்குழு கிராமி விருதை வென்றுள்ளது. சிறந்த ஆல்பம் பிரிவில் சக்தி இசைக்குழுவின் "THIS MOMENT" எனும் ஆல்பம் தேர்வாகி விருது வென்றுள்ளது. இசைத்துறையில் வழங்கப்படும் உயரிய விருது கிராமி என்பது குறிப்பிடத்தகக்து. கிட்டார் கலைஞர் ஜான் மெக்லாலின், தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகிர் உசேன், பாடகர் சங்கர் மகாதேவன், இசையமைப்பாளர் வி செல்வகணேஷ் மற்றும் வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலன் ஆகியோர் இந்த குழுவின் இடம்பெற்றுள்ளனர். தமிழில் வெண்ணிலா கபடி குழு, துரோகி மற்றும் குள்ளநரி கூட்டம் போன்ற படங்களுக்கு செல்வகணேஷ் இசையமைத்துள்ளார். இவரது தந்தை பிரபல கடம் வித்வான் விக்கு விநாயக்ராமின் பெயரும் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
SHAKTI wins a #GRAMMYs #GRAMMYs2024 !!! Through this album 4 brilliant Indian musicians win Grammys!! Just amazing. India is shining in every direction. Shankar Mahadevan, Selvaganesh Vinayakram, Ganesh Rajagopalan, Ustad Zakhir Hussain. Ustad Zakhir Hussain won a second Grammy… pic.twitter.com/dJDUT6vRso
— Ricky Kej (@rickykej) February 4, 2024
66வது கிராமி விருது வழங்கும் விழா..!
இசைக்கலைஞர்களுக்கான உயரிய அங்கீகாரமாக கருதப்படும், கிராமி விருது வழங்கும் 66வது ஆண்டு விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் சிறந்த ஆல்பம் பிரிவில் இந்தியாவின் இசைக்குழு விருது வென்றது. சுசானா பாக்கா, பொகாண்டே, பர்னா பாய் மற்றும் டேவிடோ போன்ற கலைஞர்களிடமிருந்து நிலவிய கடும் போட்டிக்கு மத்தியில் சக்தி குழு விருதை தனதாக்கியுள்ளது. ஒரு குழுவின் முதல் ஆல்பமே கிராமி விருது வென்றது, கடந்த 45 ஆண்டுகளில் இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. இந்தியாவைச் சேர்ந்த புல்லாங்குழல் கலைஞர் ராகேஷ் சவுராசியாவை தொடர்ந்து, இரண்டு முறை கிராமி விருது வென்ற இந்தியர் என்ற பெருமையை தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகிர் உசேன் பெற்றுள்ளார்.
சங்கர் மகாதேவன் பெருமிதம்:
விருதை பெற்றுக்கொண்டு பேசிய பாடகர் சங்கர் மகாதேவன், எனது குழு, கடவுள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் இந்தியாவுக்கு நன்றி. இந்தியாவை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம். கடைசியாக ஆனால் குறைந்தது அல்ல, எனது இசையின் ஒவ்வொரு குறிப்பும் அர்ப்பணிக்கப்பட்ட எனது மனைவிக்கு இந்த விருதை அர்ப்பணிக்க விரும்புகிறேன்: என பெருமிதம் தெரிவித்தார்.