Varisu: திஸ் இஸ் விஜய் மேஜிக்.. 75 மில்லியன்களை கடந்த வாரிசு ‘ரஞ்சிதமே’..கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவை டிசம்பர் 24 ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.
வாரிசு திரைப்படத்தின் முதல் சிங்கிளான ரஞ்சிதமே பாடல் வெளியாகி மெகா ஹிட் அடித்த நிலையில், தற்போது ரஞ்சிதமே பாடல் யூடியூபில் 75 மில்லியன் பார்வையாளர்களை எட்டி சாதனை படைத்துள்ளது. நடிகர் விஜயின் சொந்த குரலில் உருவாகியுள்ள இந்த பாடல் பட்டிதொட்டி எல்லாம் ஹிட் அடித்திருக்கிறது. இசையமைப்பாளர் தமன் இசையில் பாடகி மானசி இந்த பாடலை பாடியுள்ளார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இப்படம் பொங்கலுக்கு வெளியாக தயாராக உள்ளது. முன்னதாக படம் வெளியாவதில் ஏற்பட்ட சில சர்ச்சைகள் முடிவுக்கு வந்தது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவை டிசம்பர் 24ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். இப்படம் பொங்கலுக்கு தெலுங்கில் வெளியாவதில் பல சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில், தற்போது அனைத்தும் சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
ஏற்கெனவே அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படம் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த இரண்டு படங்களும் பொங்கலுக்கு மோத உள்ளதை எதிர்பார்த்து கோலிவுட் ரசிகர்கள் உற்சாகத்தில் காத்துள்ளனர்.