மேலும் அறிய

Whistle Podu: சொந்த சாதனையை தகர்த்தெறிந்த நடிகர் விஜய்.. மாஸ் காட்டிய விசில் போடு பாடல்!

ஏஜிஎஸ் நிறுவனம் The Greatest Of All Time படத்தில் இருந்து முதல் பாடலான விசில் போடு பாடலை கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிட்டது.

நடிகர் விஜய் நடித்துள்ள The Greatest Of All Time பாடல் ஒருநாளில் அதிக பார்வையாளர்களை பெற்ற பாடல் என்ற சாதனையைப் பெற்றுள்ளது. 

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் The Greatest Of All Time. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மீனாட்சி சௌத்ரி ஹீரோயினாக நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் பிரஷாந்த், மைக் மோகன், பிரபுதேவா, அஜ்மல் அமீர், சினேகா,லைலா,விடிவி கணேஷ், யோகிபாபு, பிரேம்ஜி அமரன், வைபவ் என ஏகப்பட்ட நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர். 

The Greatest Of All Time படத்தில் விஜய் இரட்டை வேடத்தை நடிக்கிறார். உளவுத்துறை பற்றிய படம் என்பதால் மேக்கிங்கில் மிரட்டும்படி தயாராகி வருகிறது. அவ்வப்போது போஸ்டர்களை விட்டு ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஏஜிஎஸ் நிறுவனம் The Greatest Of All Time படத்தில் இருந்து முதல் பாடலான விசில் போடு பாடலை கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிட்டது. மதன் கார்க்கி வரிகளில் நடிகர் விஜய் தான் இந்த பாடலை பாடியிருந்தார். முழுக்க முழுக்க விஜய்யின் அரசியல் வருகையை வெளிக்கொணரும் வகையில் இப்பாடலின் வரிகள் இடம் பெற்றிருந்தது. 

இந்த பாடல் எதிர்பார்த்த அளவு இல்லை என ரசிகர்கள் கலவையான விமர்சனத்தை தெரிவித்து வரும் நிலையில் பாடல் வரிகள் அடங்கிய வீடியோவின் இறுதியில் விஜய், பிரபுதேவா, பிரஷாந்த் ஆகிய 3 பேரும் டான்ஸ் ஆடுவது கண்கொள்ளா காட்சியாக உள்ளதாக தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விசில் போடு பாடல் மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளது. 

அதன்படி தென்னிந்திய சினிமாவில் 24 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களை பெற்ற பாடல் என்ற சாதனையை சொந்தமாக்கியுள்ளது. விசில் போடு பாடல் சுமார் 24.88 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக 2022 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் தான் இதுநாள் வரை 23.77 மில்லியன் பார்வைகளுடன் முதலிடத்தில் இருந்தது. அதனை விசில் போடு பின்னுக்கு தள்ளியுள்ளது.

மேலும் 3வது இடத்தில் மகேஷ்பாபுவின் குண்டூர் காரம் படத்தில் இடம்பெற்ற தம் மசாலா பாடல் 17.42 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. 4வது இடத்தில் விஜய்யின் வாரிசு படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடல் 16.68 மில்லியன் பார்வைகளுடனும், 5வது இடத்தில் லியோ படத்தில் இடம்பெற்ற நான் ரெடி பாடல் 16.54 மில்லியன் பார்வைகளுடன் உள்ளது. ஆக மொத்த தென்னிந்திய சினிமாவின் கிங் ஆக விஜய் மாறியுள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Ramadoss Vs Anbumani: “நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
“நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
EPS ADMK: அதிமுகவில் ஓபிஎஸ்க்கு நோ... டிடிவிக்கு..? அமித்ஷாவுடன் சந்திப்பில் நடந்தது என்ன.? இபிஎஸ் பரபரப்பு தகவல்
அதிமுகவில் ஓபிஎஸ்க்கு நோ... டிடிவிக்கு..? அமித்ஷாவுடன் சந்திப்பில் நடந்தது என்ன.? இபிஎஸ் பரபரப்பு தகவல்
ABP Premium

வீடியோ

ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!
Madhampatti Rangaraj|”அது என் குழந்தையா DNA TEST எடுக்கணும்” ஜாய்-ஐ சீண்டும் மாதம்பட்டி
MP Jothimani Issue | ’’எதுக்கு வந்தீங்க ஜோதிமணி?’’வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்அடித்து விரட்டிய காங்கிரஸார்’’ஏய்..போடா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Ramadoss Vs Anbumani: “நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
“நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
EPS ADMK: அதிமுகவில் ஓபிஎஸ்க்கு நோ... டிடிவிக்கு..? அமித்ஷாவுடன் சந்திப்பில் நடந்தது என்ன.? இபிஎஸ் பரபரப்பு தகவல்
அதிமுகவில் ஓபிஎஸ்க்கு நோ... டிடிவிக்கு..? அமித்ஷாவுடன் சந்திப்பில் நடந்தது என்ன.? இபிஎஸ் பரபரப்பு தகவல்
Tata Punch Facelift: பீஸ்ட் மோடில் பஞ்ச்.. ஃபேஸ்லிஃப்ட்டின் வேரியண்ட்களும், அம்சங்களும்.. மொத்த லிஸ்டை கொடுத்த டாடா
Tata Punch Facelift: பீஸ்ட் மோடில் பஞ்ச்.. ஃபேஸ்லிஃப்ட்டின் வேரியண்ட்களும், அம்சங்களும்.. மொத்த லிஸ்டை கொடுத்த டாடா
Trump Vs Petro: அமெரிக்காவிடமிருந்து தப்புமா கொலம்பியா.? ட்ரம்ப்பை அழைத்துப் பேசிய பெட்ரோ; விரைவில் சந்திப்பு
அமெரிக்காவிடமிருந்து தப்புமா கொலம்பியா.? ட்ரம்ப்பை அழைத்துப் பேசிய பெட்ரோ; விரைவில் சந்திப்பு
iPhone 200mp Camera: DSLR-களை ஓரங்கட்ட வரும் ஆப்பிள் ஐபோன்; ஆத்தாடி.! 200 MP கேமராவா.? சம்பவம் எப்போ தெரியுமா.?
DSLR-களை ஓரங்கட்ட வரும் ஆப்பிள் ஐபோன்; ஆத்தாடி.! 200 MP கேமராவா.? சம்பவம் எப்போ தெரியுமா.?
Chennai Power Cut: சென்னைல ஜனவரி 9-ம் தேதி எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரியுமா.? விவரம் இதோ
சென்னைல ஜனவரி 9-ம் தேதி எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரியுமா.? விவரம் இதோ
Embed widget