LEO: பேரை கேட்டாலே அதிருதுல்ல.. தளபதி 67 டைட்டில் லியோ..! ரிலீஸ் எப்போது தெரியுமா?
Thalapathy 67 Title LEO: ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த தளபதி 67 படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. இதனை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த தளபதி 67 படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. இதனை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மாஸ்டர் கூட்டணி
கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - தயாரிப்பாளர் லலித் குமார் மீண்டும் 2வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளனர். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஜனவரி 31 ஆம் தேதி வெளியானது. அன்றைய தினம் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, சண்டைப் பயிற்சியாளராக அன்பறிவ், எடிட்டிங் ஃபிலோமின் ராஜ், கலை இயக்குநராக சதீஷ் குமார், நடன இயக்குநராக தினேஷ் மாஸ்டர், வசனங்களை லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், தீரஜ் வைத்தி ஆகியோர் பணியாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
We are as excited as you are, with all your support & love we are happy to present you the title of #Thalapathy67 ❤️
— Seven Screen Studio (@7screenstudio) February 3, 2023
- Team #LEO ♥️
▶️ https://t.co/U8JHDILQdl#BLOODYSWEET
WW From OCT19🔥#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @Jagadishbliss
குவிந்த நட்சத்திரங்கள்
இதனிடையே தளபதி 67 படத்தில் ஹீரோயினாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, இயக்குநர் மிஷ்கின், நடிகர் மன்சூர் அலிகான், மலையாள இளம் நடிகர் மேத்யூ தாமஸ், இயக்குநர் கௌதம் மேனன், நடிகர் அர்ஜூன் ஆகியோர் இப்படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து அப்டேட்டுகள்
இதனைத் தொடர்ந்து காஷ்மீரில் நடக்கும் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் தனி விமானம் மூலம் சென்றுள்ளனர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில் படக்குழுவும் காஷ்மீர் பயண வீடியோவை அதிகாரப்பூர்வமாக படக்குழு இன்று வெளியிட்டது. மேலும் தளபதி 67 படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தது. கடந்த ஜனவரி 31 ஆம் தேதி வரை இன்று (பிப்ரவரி 3) வரை அடுத்தடுத்து அப்டேட்டுகளை வழங்கி தளபதி 67 படக்குழு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதன்படி தளபதி 67 படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு லியோ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் ஆயுத பூஜை விடுமுறை தினத்தை முன்னிட்டு அக்டோபர் 19 ஆம் தேதி திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேக்கிங் வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.