மேலும் அறிய

Thalapathy 67 Cast : இத்தனை பேர் வச்சு என்னங்க பண்ண போறீங்க.. படையென திரண்ட ’தளபதி 67’ படக்குழு ஃபுல் லிஸ்ட்!

Thalapathy 67 Full Cast Details: தளபதி 67 படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணையும் நடிகர்களின் ஃபுல் லிஸ்ட்

கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் வெளியானது. இப்படத்தின் மூலம் முதல் முறையாக விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் கூட்டணி சேர்ந்தார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான அப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக தளபதி 67 திரைப்படம் மூலம் இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது. 

தளபதி 67 படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் தொடங்கவுள்ள நிலையில் நேற்று படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அப்டேட்கள் சரவெடி போல அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட வைத்தது. தளபதி 67 திரைபடத்தில் இணைய உள்ள நடிகர் நடிகைகள் குறித்த ஒரு ஷார்ட் அப்டேட் இதோ உங்களுக்காக:

தளபதி 67 பூஜை விழா
தளபதி 67 பூஜை விழா

சஞ்சய் தத் :

பாலிவுட் திரையுலகின் முக்கியமான ஒரு நடிகரான சஞ்சய் தத் இப்படத்தில் முக்கியமான ஒரு வில்லனாக இணைகிறார். கடந்தாண்டு வெளியான பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமான கே.ஜி.எஃப் 2 படத்தில் ஆதிரா என்ற கதாபாத்திரத்தில் கொடூரமான வில்லனாக மிரட்டலாக  நடித்திருந்தார். அப்படத்தில் அவரின் சிறப்பான நடிப்பிற்கு பிறகு வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. 

ப்ரியா ஆனந்த் :

தமிழில் 2009 ஆம் ஆண்டு வாமனன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ப்ரியா ஆனந்த், எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, வை ராஜா வை, அரிமா நம்பி, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, எல்கேஜி மற்றும் பல  படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது பிரியா ஆனந்த் தளபதி 67 படத்தில் இணைந்துள்ளார்.

மன்சூர் அலிகான் :

தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான வில்லனாக அனைவரையும் கவர்ந்தவர் மன்சூர் அலிகான். கார்த்தி நடித்து சூப்பர் ஹிட்டான “கைதி” படத்தின் கதை முதலில் மன்சூர் அலிகானுக்காக எழுதப்பட்டிருந்தது. தொடர்ந்து விக்ரம் படத்தில் மன்சூர் அலிகான் ஆடிய பாடல் ஒன்றை லோகேஷ் பயன்படுத்தியிருப்பார். அந்த அளவிற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மன்சூர் அலிகானின் மிகவும் தீவிரமான ரசிகர். அன்று தவறிய வாய்ப்பு தற்போது தளபதி 67 திரைப்படம் மூலம் நிறைவேறுகிறது. மேலும் 1999 ஆண்டு வெளியான மின்சார கண்ணா படத்திற்குப் பிறகு விஜய்யுடன் மன்சூர் அலிகான் இணைந்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாண்டி மாஸ்டர் & மேத்யூ தாமஸ் :

ஒரு டான்ஸ் மாஸ்டராக கலக்கி வரும் சாண்டி மாஸ்டர் முதல் முறையாக ஒரு நடிகராக தளபதி 67 திரைப்படம் மூலம் அறிமுகமாகிறார். 2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற கும்பலாங்கி நைட்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான மேத்யூ தாமஸ், தொடர்ந்து தண்ணீர் மத்தான் தினங்கள், அஞ்சம் பத்திரா, ஆபரேஷன் ஜாவா, தி ஒன், ஜோ அண்ட் ஜோ, பிரகாஷன் பரக்கட்டே உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் மலையாள திரையுலகில் பிரபலமானவர். இந்த வளர்ந்து வரும் இளம் நடிகர் மேத்யூ தாமஸ் தளபதி 67 படத்தில் இணைந்துள்ளார். 

கௌதம் மேனன் :

மின்னலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான கௌதம் மேனன், தொடர்ந்து காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, நீதானே என் பொன்வசந்தம், என்னை அறிந்தால், வெந்து தணிந்தது காடு என பல ஹிட் படங்களை இயக்கிய கௌதம் மேனன் ஒரு சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவரும் தளபதி 67 திரைப்படத்தில் இணைகிறார். 

அர்ஜுன் :

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்த அர்ஜுன் இயக்குனராகவும் தன்னை நிலை நிறுத்தியுள்ளார். சமீபகாலமாக வில்லனாகவும் கலக்கிய அர்ஜுன் தற்போது நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 67 திரைப்படத்திலும் வில்லனாகிறார் என கூறப்படுகிறது. 

த்ரிஷா:

தென்னிந்திய சினிமாவின் இளவரசி என கொண்டாடப்படும் நடிகை த்ரிஷா நடிகர் விஜயுடன் இணைந்து 'கில்லி' திரைப்படத்தில் கலக்கினார். இவர்களின் காம்போ திரை ரசிகர்களின் பேவரைட் காம்போ. அதனை தொடர்ந்து ஆதி, திருப்பாச்சி, குருவி உள்ளிட்ட படங்களின் இவர்களின் காம்போ தொடர்ந்தது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த காம்போ தளபதி 67 திரைப்படத்தில் இணைய போவது ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. 

மிஷ்கின் :

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர் மிஷ்கின். நடிகர் விஜய் நடித்த யூத் திரைப்படத்தில் அசோசியேட் இயக்குநராக பணியாற்றிய இவர் கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தளபதி 67 திரைப்படம் மூலம் இணைகிறார்கள். 

தளபதி 67 பூஜை :

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாக இருக்கும் தளபதி 67 திரைப்படத்தின் பூஜை இன்று மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த பூஜையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பங்கேற்றார். தளபதி 67 படத்தின் பூஜை புகைப்படத்தையும், வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: தவெகவின் முதல் பொதுக்குழு..! விஜய் பேசப்போவது என்ன? மாநில சுற்றுப்பயணம், பூத் கமிட்டி மாநாடு?
TVK Vijay: தவெகவின் முதல் பொதுக்குழு..! விஜய் பேசப்போவது என்ன? மாநில சுற்றுப்பயணம், பூத் கமிட்டி மாநாடு?
IPL 2025 SRH vs LSG: ஐதரபாத்தை ஊதித்தள்ளிய பூரண்! அசால்டாக அடிச்சு ஜெயிச்ச லக்னோ! கம்மின்ஸ் வியூகம் காலி!
IPL 2025 SRH vs LSG: ஐதரபாத்தை ஊதித்தள்ளிய பூரண்! அசால்டாக அடிச்சு ஜெயிச்ச லக்னோ! கம்மின்ஸ் வியூகம் காலி!
இது பாஜகவுக்கு ஆரம்பம்தான்! கை கோர்த்த முதலமைச்சர்கள் ஸ்டாலின், ரேவந்த் ரெட்டி
இது பாஜகவுக்கு ஆரம்பம்தான்! கை கோர்த்த முதலமைச்சர்கள் ஸ்டாலின், ரேவந்த் ரெட்டி
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Coimbatore | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Vijay vs Udhayanidhi : ஜனநாயகன் vs பராசக்தி விஜய்யுடன் மோதும் உதயநிதி! அரசியல் ஆயுதமான சினிமாEPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: தவெகவின் முதல் பொதுக்குழு..! விஜய் பேசப்போவது என்ன? மாநில சுற்றுப்பயணம், பூத் கமிட்டி மாநாடு?
TVK Vijay: தவெகவின் முதல் பொதுக்குழு..! விஜய் பேசப்போவது என்ன? மாநில சுற்றுப்பயணம், பூத் கமிட்டி மாநாடு?
IPL 2025 SRH vs LSG: ஐதரபாத்தை ஊதித்தள்ளிய பூரண்! அசால்டாக அடிச்சு ஜெயிச்ச லக்னோ! கம்மின்ஸ் வியூகம் காலி!
IPL 2025 SRH vs LSG: ஐதரபாத்தை ஊதித்தள்ளிய பூரண்! அசால்டாக அடிச்சு ஜெயிச்ச லக்னோ! கம்மின்ஸ் வியூகம் காலி!
இது பாஜகவுக்கு ஆரம்பம்தான்! கை கோர்த்த முதலமைச்சர்கள் ஸ்டாலின், ரேவந்த் ரெட்டி
இது பாஜகவுக்கு ஆரம்பம்தான்! கை கோர்த்த முதலமைச்சர்கள் ஸ்டாலின், ரேவந்த் ரெட்டி
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
DMK Vs ADMK: மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை...
மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை... "குடிப்பதற்கு தண்ணீர் இல்லை... மேயருக்கு குழு குழு ரூம் தேவையா?" -அதிமுக ஆவேசம்
Shruthi Narayanan: சிவகார்த்திகேயனை துபாயில் சந்தித்த ஸ்ருதி நாராயணன்! எதற்காக? என்ன நடந்தது?
Shruthi Narayanan: சிவகார்த்திகேயனை துபாயில் சந்தித்த ஸ்ருதி நாராயணன்! எதற்காக? என்ன நடந்தது?
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்: மத்திய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு:  எப்போது?
தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்: மத்திய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு: எப்போது?
Embed widget