Parijatham: விஷாலை அடைய.. ஸ்ரீஜா செய்த அந்த காரியம் - பாரிஜாதத்தில் இன்று
பாரிஜாதம் சீரியலில் விஷாலை அடைய ஸ்ரீஜா சதி செய்யும் நிலையில், அடுத்து என்ன நடக்கிறது? என்பதை காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலில் சனிக்கிழமை எபிசோடில் இசை படையல் போட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சந்தோஷத்தில் சுப்ரதா:
அதாவது ருக்குமணி யாருக்கும் தெரியாமல் சாப்பாட்டை எடுத்து இலையை காலி செய்ய அதன் பிறகு சிந்தாமணி மற்றும் ஸ்ரீஜா ஆகியோர் மீண்டும் சாப்பாட்டை வைத்து விடுகின்றனர்.
ஆனால் இரவில் லேட்டாக வீட்டுக்கு வந்த விஷால் இந்த சாப்பாட்டை சாப்பிட்டு ஒரு பூவை மட்டும் வைத்து விட மறுநாள் காலையில் எழுந்து பூஜை அறையை திறந்து பார்க்க இலை காலியாக இருப்பதை பார்த்து முன்னோர்கள் ஆசீர்வாதம் கொடுத்து விட்டதாக சுப்ரதா சந்தோஷம் அடைகிறாள்.
தோழி வீட்டிற்குச் செல்லும் ஸ்ரீஜா:
இதனால் ஸ்ரீஜா, சிந்தாமணி, பானுமதி ஆகியோர் கடுப்பாகின்றனர். இதனைத் தொடர்ந்து ஸ்ரீஜா விஷாலை அடைவதற்காக திட்டமொன்றை தீட்டி தனது தோழி வீட்டிற்கு செல்கிறாள். பிறகு பார்த்து இருப்பதாக சொல்லி விஷாலை தோழி வீட்டிற்கு அழைக்கிறாள்.
விஷாலின் அங்கு செல்ல அவனுக்கு ஜூஸின் மயக்கம் மருந்து கலந்து கொடுத்து விஷாலை மயங்க வைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















