Kartthigai Deepam: கபடியில் ஜெயித்த கார்த்திக்.. ரேவதியை கடத்த உத்தரவு - கார்த்திகை தீபத்தில் இன்று
கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலை நேற்றைய எபிசோடில் கார்த்திக் கபடி போட்டியில் களமிறங்கிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
ரேவதியை கடத்த உத்தரவு:
அதாவது கார்த்திக் தனியாளாக எதிரணி அனைவரையும் இந்த கபடி போட்டியில் ஜெயிக்கிறான். இதைப் பார்த்து ஊர்மக்கள் அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். சரவணன் ஊர் மக்கள் தான் இந்த முறை கோவிலுக்குள் நுழைய முடியும் என முடிவு செய்யப்படுகிறது.
இதனால் கடுப்பாகும் முத்துப்பாண்டி கார்த்திக்கை பழிதீர்க்க ரேவதியை கடத்த சொல்லி ஆணையிடுகிறான். இதனால் ரவுடிகள் ரேவதி கடத்த தயாராக முத்துப்பாண்டி மனைவி இதெல்லாம் வேண்டாம் என்று தடுக்க முயற்சி செய்கிறாள்.
அடுத்து நடக்கப்போவது என்ன?
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















