Karthigai Deepam: என் புருஷன்கூடதான் தூங்குவேன்.. அம்மாவிடம் அடம்பிடித்த ரேவதி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வர இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்தி மற்றும் ரேவதியை பிரித்து வைக்க சந்திரகலா காவல் காத்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அம்மாவிடம் அடம்பிடித்த ரேவதி:
அதாவது, மயில்வாகனம் ஒரு பொம்மையை தூக்கி போட்டு சந்திர கலாவை திசை திருப்ப, ரேவதி ஓடிவந்து கார்த்தியின் மடியில் தலை வைத்து படித்து விடுகிறாள். சந்திரகலா "உன்னையும் அவனை தான் தனித்தனியாக தூங்க சொன்னாங்களா?" என்று சத்தம் போட, "கார்த்தி என்னோட புருஷன் நான் இங்கதான் தூங்குவேன்" என்று ரேவதி பதிலடி கொடுக்கிறாள்.
பிறகு சந்திரகலா சாமுண்டீஸ்வரியை அழைத்து வர அவளும் சத்தம் போட, ரேவதி "கோர்ட் ஆர்டர் படி இன்னமும் நாங்க புருஷன் பொண்டாட்டி தான்" என பதிலடி கொடுக்க சாமுண்டீஸ்வரி பதில் பேச முடியாமல் "வாடி" என்று சந்திரகலாவை அழைத்து கொண்டு செல்கிறாள்.
வயிறு வலியில் துடித்த ரோகிணி:
அடுத்து ரோகினி வயிறு வலியில் தவிக்க கார்த்திக், மயில்வாகனம் ஆகியோர் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல டாக்டர் பரிசோதனை செய்து பயப்படுற மாதிரி ஒண்ணும் இல்ல என்று சொல்கின்றார்.
அதன் பிறகு இவர்கள் வீட்டுக்கு வர சந்திரகலா ,இதை பார்த்து சாமுண்டீஸ்வரிக்கு சொல்ல கார்த்திக் "ரோகினிக்கு உடம்பு சரியில்லை.." அதனால் ஹாஸ்பிடல் அழைத்துச் சென்றதாகசொல்கிறான்.
அடுத்து கான்ஸ்டபிள் பேத்தியை சந்தித்து கார்த்திக், சாமுண்டீஸ்வரியின் அம்மா பத்தி ஏதாவது சொன்னார்களா? என்று விசாரிக்க, தாத்தா அதை பத்தி ஒன்னும் சொன்னது இல்ல.. பக்கத்து ஊர்ல அரசியல்வாதி பரமேஸ்வரினு ஒருத்தவங்க இருக்காங்க அவங்ககிட்ட சொல்லி இருப்பாரு என்று சொல்கிறார்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















