Karthigai Deepam: நவீனை கடத்திய சந்திரகலா.. திருடிய போலி பெற்றோர்கள் - அடுத்து நடக்கப்போவது என்ன?
கார்த்திகை தீபம் சீரியலில் நவீனை சந்திரகலா கடத்திய நிலையில், அடுத்து நடக்கப்போவது என்ன? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஜவுளிக்கடைக்கு துணி எடுக்க சென்றிருக்க துர்கா நவீனை வர சொல்லிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
நவீனை கடத்திய சந்திரகலா:
அதாவது, நவீனை பார்த்த சந்திரகலா அவனை ஆள் வைத்து கடத்தி துணிகள் செல்லும் வண்டியில் தூக்கி போட்டு அனுப்புகிறாள், வழியில் போலீஸ் வண்டியை நிறுத்தி பரிசோதனை செய்தும் நவீனை கண்டுபிடிக்காமல் விட்டு விடுகின்றனர்.
இதனை தொடர்ந்து கார்த்திக் கடத்தப்பட்ட நவீனை காப்பாற்றுகிறான், மறுபக்கம் சிவனாண்டியும் சந்திரகலாவும் எப்படியாவது இந்த நவீனை மாட்டி விட வேண்டும் என திட்டமிடுகின்றனர். அடுத்து நவீனை துர்காவின் ரூமில் தங்க வைக்கிறான் கார்த்திக்.
திருடிய போலி பெற்றோர்கள்:
அப்போது நவீன் அப்பா அம்மாவாக நடிக்க வந்தவர்கள் திருட்டு வேலையில் ஈடுபட விஷயத்தை சொல்கிறான். பிறகு ரேவதியின் நடவடிக்கையை பற்றி மயில்வாகனத்திடம் சொல்ல அவன் ரேவதியும் நல்ல பொண்ணு தான்.. அவளை ஏத்துக்கோ என்று அறிவுரை வழங்குகிறான்.
அடுத்து நடக்கப்போவது என்ன?
அடுத்து நவீன் துர்கா ரூமுக்குள் இருப்பதை அறியும் சந்திரகலா அவனை சிக்க வைக்கிறாள், அதே நேரத்தில் கார்த்திக் நகையை திருடும் போலி அப்பா அம்மாவை கையும் களவுமாக பிடிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















