Karthigai Deepam: கார்த்திக் காட்டிய சந்திரகலாவின் "அந்த" வீடியோ! ஷாக்கில் உறைந்த மயில்வாகனம்!
Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக் சந்திரகலா சிவனாண்டியுடன் பேசும் வீடியோவால் மயில்வாகனம் அதிர்ச்சியில் உறைகிறார்.

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி ஜீ தமிழ். திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் முந்தைய எபிசோடில் சந்திரகலா மற்றும் சிவனாண்டி இருவரும் சந்தித்து பேசிக்கொள்ள, கார்த்திக் அதை வீடியோ எடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது? என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கார்த்திக் காட்டிய அந்த வீடியோ:
அதாவது மயில்வாகனம் தூக்கத்திலிருந்து எழுந்து தண்ணீர் குடிப்பதற்காக வெளியே வர, கார்த்திக் லேட்டாக வீட்டுக்கு வர அதை பார்த்து "எங்க போயிட்டு வரீங்க?" என்று கேட்கிறான். பிறகு கார்த்திக் அந்த வீடியோவை காட்ட அதை பார்த்து மயில் வாகனம் அதிர்ச்சியாகிறான்.
இங்க அக்காவுக்கு விசுவாசமா இருக்க மாதிரி நடிச்சிட்டு, சின்ன மாமியார் இன்னும் புருஷன் கூட கொஞ்சி குலாவிட்டு தான் இருக்காங்க என கேட்கிறான். அதைத்தொடர்ந்து அடுத்த நாள் காலையில் சாமுண்டீஸ்வரி சந்திரகலா ஆகியவர்கள் காத்துக் கொண்டிருக்க, கார்த்திக் லேட்டாக உள்ளே வருகிறான்.
சண்டையிடும் சந்திரகலா:
"என்ன டிரைவர் நைட்டு லேட்டா தூங்கினீர்களா?" என்று மயில் வாகனம் கேட்க, கார்த்திக் "ஆமா ஒரு படம் பார்த்தேன்! நம்ப வீட்ல இருக்க அக்கா, தங்கச்சி மாதிரி தான். அக்காவுக்கு தங்கச்சி ரொம்ப விசுவாசமா இருப்பாங்க. ஆனா முதுகுல குத்துற கதை" என்று சொன்னது சந்திரகலா அதிர்ச்சியாகி கார்த்திக்கிடம் சண்டை போடுகிறாள்.
அதைத்தொடர்ந்து, சாமுண்டீஸ்வரி, "அவன் ஏதோ படம் பார்த்ததா சொன்னான்! நீ எதுக்கு பதற?" என்று கேட்க, சந்திரகலா சமாளிக்கிறாள். பிறகு சாமுண்டீஸ்வரி அப்புறம் என்ன ஆச்சு என்று கேட்க, புருஷன் கூட வாழாமல் இருக்க தங்கச்சி அக்காவுக்கு தெரியாம நைட்ல புருசனை பார்த்து பேசி முடிவுகளை எடுக்கிறாங்க என்று சொல்ல சந்திர கலாவுக்கு இன்னும் அதிர்ச்சியாகிறது.
அடுத்து நடக்கப்போவது என்ன?
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.






















