Karthigai Deepam: வீட்டை பறிகொடுத்த அம்மா.. முதலிரவு குஷியில் மகள் - சாமுண்டீஸ்வரி வீட்டில் நடப்பது என்ன?
சாமுண்டீஸ்வரியின் வீட்டை சிவனாண்டி எழுதி வாங்கிய நிலையில், கார்த்திகை தீபம் சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் மிகவும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலுக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மேஜிக் பேனாவை வைத்து சாமுண்டீஸ்வரி வீட்டை எழுதி வாங்க சந்திரகலா சிவனாண்டி திட்டமிட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கையெழுத்து போட்ட சாமுண்டீஸ்வரி:
அதாவது, கார்த்திக் ரேவதி ஆகியோர் துர்கா நவீனை சந்தித்து பேசுகின்றனர். அடுத்ததாக சந்திரகலா சிவனாண்டி ஏற்பாடு செய்த ஆட்கள் டாக்குமெண்ட்டை கொடுத்து சாமுண்டீஸ்வரியிடம் கையெழுத்து வாங்குகின்றனர்.
கையெழுத்து வாங்கி இவர்கள் வெளியே கிளம்ப கார்த்திக் வீட்டுக்குள் நுழைய, என்ன விஷயம் என்று விசாரிக்க சாமுண்டீஸ்வரி கையெழுத்து போட்ட விஷயத்தை சொல்கிறாள். கார்த்திக் எல்லாத்தையும் முழுசா படிச்சுதானே கையெழுத்து போட்டீங்க என்று விசாரிக்க சாமுண்டீஸ்வரியும் ஆமாம் என்று சொல்கிறாள்.
வீட்டை விட்டு விரட்டும் சிவனாண்டி:
அடுத்த நாள் காலையில் சிவனாண்டி வீட்டுக்கு வந்து சாமுண்டீஸ்வரி வீட்டை எழுதிக் கொடுத்துட்டா, எல்லோரும் வீட்டை விட்டு வெளியே போங்க என்று அதிர்ச்சி கொடுக்கிறான். இதையடுத்து ஊர் மக்கள் இதை நம்ப மறுக்க சாமுண்டீஸ்வரி கையெழுத்து நான்தான் போட்டேன். ஆனா வீட்டை எழுதி கொடுக்கவில்லை என்று சொல்கிறாள்.
ஒருநாள் டைம் கேட்ட கார்த்திக்:
போலீசுக்கு போகலாம் என்று முடிவெடுக்க கார்த்திக் போலீஸ்க்கு எல்லாம் போக வேண்டாம், அப்புறம் கோர்ட்டுக்கு போக வேண்டியது இருக்கும் வீட்டுக்கு சீல் வைப்பாங்க, 24 மணி நேரத்தில் உண்மை என்ன என்பதை நானே கண்டுபிடித்து நிரூபிக்கிறேன் என்று வாக்கு கொடுக்கிறான்.
முதலிரவு குஷியில் ரேவதி:
அடுத்ததாக ரூமுக்கு வர ரேவதி முதலிரவு செட்டப்பில் ஏற்பாடு செய்து வைத்திருக்க அதைப் பார்த்து கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான். ரேவதி அவனுடன் காதல் கலந்த சண்டையில் ஈடுபடுகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழில் காணலாம்.





















