Karthigai Deepam: சாமுண்டீஸ்வரியின் வீடு பறிபோகிறதா? மாமியாரின் சொத்தை காப்பாற்றுவாரா மருமகன்?
கார்த்திகை தீபம் சீரியலில் சாமுண்டீஸ்வரிடம் இருந்து வீட்டை எழுதி வாங்க சதித்திட்டம் நடக்கும் சூழலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். விறுவிறுப்பான இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளனர். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்தியை அழிக்க காளியம்மாள் திட்டமிட சாமுண்டீஸ்வரிக்கும் கார்த்தி மீது சந்தேகம் உருவான நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
ரோகிணி கர்ப்பம்:
அதாவது, ரோகிணியின் கர்ப்பம் குறித்து பரமேஸ்வரி பாட்டி வீட்டில் எல்லாருக்கும் தெரிய வருகிறது. இதையடுத்து கார்த்திக் ரோஹிணியிடம் நீங்க கவலைப்படாதீங்க, நீங்க ஆசைப்படுற மாதிரி அத்தையே வந்து உங்களுக்கு துளசி தண்ணீர் தருவாங்க என்று உறுதி அளிக்கிறான்.
மறுபக்கம் சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு இருவர் வர சந்திரகலா அவர்களை பார்த்து வீட்டிற்குள் அழைக்கிறாள். சாமுண்டீஸ்வரியிடம் பெண்களுக்காக நடத்தப்படும் ட்ரெஸ்ட்டில் இருந்து வந்திருப்பதாக சொல்லி உதவி கேட்கின்றனர்.
வீட்டை எழுதி வாங்க திட்டம்:
இதனால் சாமுண்டீஸ்வரியும் கொஞ்சம் நிலத்தை தருவதாக வாக்கு கொடுக்கிறாள். அதன் பிறகு சந்திரகலா, காளியம்மா ஆகியோர் மேஜிக் பேனாவை வைத்து ஒன்றை எழுதி கையெழுத்து வாங்கி பிறகு அதை மாற்றி எழுதி விடலாம் என்று திட்டம் போடுகின்றனர். அதன்படி, சாமுண்டீஸ்வரியின் வீட்டை எழுதி வாங்கலாம் என்று திட்டமிடுகின்றனர்.
சாமுண்டீஸ்வரியின் வீடு காப்பாற்றப்படுமா? யார் அந்த இரண்டு பெண்கள்? என இன்றைய எபிசோடில் காணலாம்.





















