Zee Tamil Awards: கார்த்திக் ராஜ் சொன்ன அதிரடி பதில்கள்.. அண்ணா சீரியல் கொண்டாட்டம் - கோல்டன் மொமென்ட்ஸ் ஹைலைட்ஸ்!
Zee Tamil Golden Moments Awards: இரண்டாவது பாகத்தில் பெஸ்ட் எமோஷன், பெஸ்ட் போல்ட்நெஸ், பெஸ்ட் மாஸ் பில்டப், பெஸ்ட் ஆக்ஷன், இதயம் தொட்ட தொடர் என பல கேட்டகரியின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கும் ரியாலிட்டி ஷோக்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.
ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பான கதைக்களத்துடன் சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் மக்கள் கொண்டாடிய தருணங்களை கொண்டாடும் வகையில் கோல்டன் மொமென்ட்ஸ் அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் முதல் பாகம் மே தினத்தில் ஒளிபரப்பானதை தொடர்ந்து இரண்டாவது பாகம் வரும் ஞாயிறு மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
முதல் பாகத்தில் பல அழகான தருணங்கள் ரசிகர்களைக் கொண்டாட வைத்த நிலையில், இரண்டாவது பாகத்தில் பெஸ்ட் எமோஷன், பெஸ்ட் போல்ட்நெஸ், பெஸ்ட் மாஸ் பில்டப், பெஸ்ட் ஆக்ஷன், இதயம் தொட்ட தொடர் என பல கேட்டகரியின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதயம் தொட்ட தொடராக அண்ணா சீரியல் கொண்டாடப்பட்டுள்ளது.
அடுத்து நடிகர் கார்த்திக் ராஜ்க்கு விருது வழங்கப்பட்டதை தொடர்ந்து அவரை வைத்து பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கேள்விகளுக்கும் கார்த்திக் அதிரடி பதில் கொடுத்து ரசிகர்களை மகிழ வைத்துள்ளார். இப்படி பல அழகான தருணங்களுடன் ஒளிபரப்பாக உள்ள கோல்டன் மொமென்ட்ஸ் பார்ட் 2 நாளை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Behind The Song: நக்மாவுடன் கவுண்டமணியை ஆட வைத்த தந்திரம்.. “வெல்வெட்டா” பாடல் உருவான கதை!