Anna Serial: முத்துபாண்டிக்கு ஷண்முகம் வைத்த ஆப்பு.. அண்ணா சீரியலின் இன்றைய அப்டேட் இதோ..!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டி சண்முகத்தை கைது செய்ய வேகவேகமாக கிளம்பிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது பரணி சண்முகத்துக்கு போன் செய்து முத்துப்பாண்டி கைது செய்ய வரும் விஷயத்தை சொல்ல பாக்கியம் கொஞ்ச நாளைக்கு வெளியூர் போய்ட்டு என்று சொல்ல ஷண்முகம் நான் எதுக்கு பயந்து போகணும்? எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக்கறேன் என்று சொல்லி போனை வைக்கிறான்.
மறுபக்கம் ஸ்டேஷனுக்கு வரும் முத்துப்பாண்டி அந்த சண்முகத்தின் மீது FIR போட்டுட்டயா? நைட்டே போட சொன்னனே என்று கேட்டு கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ஒரு பிச்சைக்கார பெண் ரத்னாவுக்கு இவன் வாங்கி கொடுத்த புடவையை கட்டி கொண்டு வந்து மாமா மாமா என்று கூப்பிட ரத்னாவுக்கு நான் வாங்கி கொடுத்த புடவையை திருடிட்டியா? புடவையை குடுடி என்று சேலையை உருவ அநாவூனா மறைந்திருந்து இதை வீடியோவாக எடுக்கிறான்.
அடுத்து DSP சம்பவ இடத்திற்கு வந்து முத்துபாண்டியை பளாரென அறைந்து ஒரு பொது இடத்தில ஒரு பொம்பளையோட புடவையை உருவர என்று கோபப்படுகிறார். மேலும் அவனை உள்ளே அழைத்து உனக்கு இந்த வேலை வேணாமா? இப்படியே போனா உன் காக்கி சட்டையை கழட்டி வச்சிட்டு சாதா முத்துபாண்டியா தான் திரியனும் என்று எச்சரிக்கிறார்.
அதனை தொடர்ந்து ஷண்முகம் மாஸாக ஸ்டேஷனுக்குள் என்ட்ரி கொடுக்க DSP வாங்க சார் என்று வரவேற்று உட்கார வைக்க முத்துப்பாண்டி முன்னாடி கெத்தாக உட்காருகிறான், இவர் ஹியூமன் ரைட்ஸ் செப்பார்ட்மெண்ட்ல இருக்க முருகேசன் சாருக்கு நெருக்கமானவர், அவருடைய தங்கச்சிக்கு மாமா பையன் எவனோ தொந்தரவு தரனாம். கல்யாணம் முடியற வரைக்கும் இவங்க வீட்டுக்கு ரெண்டு கான்ஸ்டபிளை காவலுக்கு போடு என்று சொல்கிறார்.
இதை ஒழுங்கா பண்ணு, இவர் சொல்றதை வச்சு தான் முருகேசன் சார் உன் வேலையை பற்றி முடிவெடுப்பார் என்று சொல்ல முத்துப்பாண்டி அதிர்ச்சி அடைகிறார், DSP கிளம்பி சென்றதும் ஷண்முகம் என் தங்கச்சி கல்யாணத்துக்கு உன்னையே காவல் காரனாக மாத்திட்டேன் பாத்தியா என்று பதிலடி கொடுத்து ஆட்டம் போட்டு விட்டு கிளம்புகிறான்.
இதனால் முத்துப்பாண்டி உச்சகட்ட கோபத்துக்கு செல்ல அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.