மேலும் அறிய

Siragadikka Aasai: உண்மை தெரிந்து உடைந்து அழும் ரோகினி... விழி பிதுங்கி நிற்கும் விஜயா...சிறகடிக்க ஆசை அப்டேட்!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை நேற்றையை எபிசோடில் மனோஜ் வேலைக்கு போகாமல் பார்க்கில் பொதுழுபோக்கிய வீடியோவை முத்து, வீட்டில் இருப்பவர்களுக்கு ப்ளே செய்து காமித்தார். இந்நிலையில், இது தெரியாமல் வீட்டுக்குள் வந்த மனோஜ், தான் வேலை பார்க்கும் ஷோ ரூமுக்கு விஜய் வந்தததாகவும், அவருக்கு தான் எக்ஸ்ப்ளனேஷன் செய்ததாகவும் ஒரு கார் வாங்க வந்த அவர் இரண்டு கார்கள் புக் செய்ததாகவும் கூறுகிறார். அடுத்த வாரம் சூப்பர் ஸ்டார் வீட்டில் இருந்து கார் வாங்க வருவதாகவும் மனோஜ் கூறுகிறார்.

மனோஜ் பேசுவதை விஜயா தடுக்க முயல்கிறார். அப்போது முத்து, ”அவன் தான் ஆர்வமா பேசிகிட்டு இருக்கான் இல்ல, அவனை ஏன் தடுக்குறிங்க” என சொல்கிறார். பின்னர் முத்து மனோஜூக்கு அந்த வீடியோவை ப்ளே செய்து காட்டுகிறார். மேலும் மனோஜூக்கு வேலை இல்லை என்பது விஜயாவுக்கு ஏற்கனவே தெரியும் என்பதும் தெரிய வருகிறது. அப்போது முத்து, “பார்த்தியாப்பா எல்லாம் தெரிஞ்சிருந்தும், அம்மாவே இவனுக்கு சாப்பாடு கட்டி குடுத்துருக்காங்க” என்கிறார். 

”எங்களுக்கு தெரியாம என்னன்ன வேலையெல்லாம் இந்த வீட்ல பண்ணியிருக்க, முன்னாடி பத்திரத்தை அடமானம் வச்ச, இப்போ இது” எனக் கூறுகிறார் அண்ணாமலை. அடுத்தது ரவி, “அப்போ நாங்க அன்னைக்கு ஷோ ரூம் வந்தப்போ உனக்கு வேலை இல்ல” எனக் கேட்க, நாங்க வந்திருந்தா எங்களுக்கு இன்சல்ட் ஆகி இருக்கும் என ஸ்ருதி கூறுகிறார். இதனையடுத்து முத்து, “எங்க பூக்கடை போட்டதால இவனுக்கு கெளரவ குறைச்சல்னு சீன்லாம் போட்டான். சோம்பேறி” எனக் கூறுகிறார். 

இதனையடுத்து ரூமுக்குள் சென்று ரோகினி அழுது கொண்டிருக்கிறார். மனோஜ் ரோகினியை சமாதானப்படுத்த முயல்கிறார். அப்போது ரோகினி மனோஜ் கையை தட்டி விட்டு, “போதும் நான் உன்னை எவ்ளோ நம்பினேன், என்னைய ஏமத்திட்டல்ல, நீ இப்டி செய்வனு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல” என்கிறார். “நீ இல்லனா நான் இல்லங்குற அளவுக்கு எனக்கு தோனுச்சு, என் உலகம் எல்லாமே நீதானு நெனச்சேன்” என்கிறார். உடனே மனோஜ் “உனக்கு இன்சல்டிங்கா இருக்கும்னு தான் நான் சொல்லல” என்கிறார். அதற்கு ரோகினி ”இப்போ மட்டும் என்ன நான் பெருமையாவா நின்னே” என்கிறார். 

இதனையடுத்து ரோகினி தன் தோழியை சந்திக்கிறார். மனோஜ் தன்னை ஏமாற்றியதாகக் கூறுகிறார். அப்போது அவரின் தோழி ”நீ உன் திருமணத்தை பற்றி சொல்லிவிடு” என்கிறார். ரோகினி, ”எனக்கு ஒரு இன்செக்யூரிட்டி வந்துடுச்சி டி, இதுக்கப்புறம் அவன் பொய் சொல்றானா உண்மை சொல்றானானு தெரியாது” என்கிறார். “இந்த அளவுக்கு மனோஜ் என்னை கொண்டு வந்து விட்டுட்டான். மீனாவும் என்ன நக்கலா பாக்குறா” என்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. 

தலைப்பு செய்திகள்

Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
Embed widget