Baakiyalakshmi: ராதிகாவிடம் சிக்கித் தவிக்கும் கோபி... ஈஸ்வரி கொடுத்த ஷாக்... பாக்கியலட்சுமியில் இன்று!
Baakiyalakshmi Oct 21 :
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய (அக்டோபர் 21) எபிசோடில் கணேஷ் வீடு ஒன்றை எடுத்து அங்கே அமிர்தாவையும் நிலாவையும் சீக்கிரமாக அழைத்து வருவேன் என நிலவின் போட்டோவை பார்த்து பேசிக்கொண்டு இருக்கிறான். அப்போது கணேஷின் அப்பாவும் அம்மாவும் அங்கே வந்து "வா நாம நம்ம வீட்டுக்கு போகலாம்" என அழைக்கிறார்கள்.
கணேஷ் விடாப்பிடியாக "என்னால் வர முடியாது" என சொல்ல "அப்போ நாங்களும் உன்னுடன் இங்கே இருக்கிறோம். நீ இல்லாம எங்களால் அங்கே இருக்க முடியாது" என்கிறார்கள். "அப்படியே என் மேல ரொம்ப தான் அக்கறை. சரி இருங்க. ஆனா என்னோட மனசை மாத்தலாம் என மட்டும் நினைக்காதீர்கள்" என சொல்கிறான்.
பாக்கியா வீட்டில் அனைவரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது ஈஸ்வரி வெளியில் கிளம்ப ராமமூர்த்தி ஈஸ்வரியிடம் "எங்க போற" எனக் கேட்கிறார். "நேத்து சொன்னது எல்லாம் மறந்து போச்சா? நான் போய் கோபியை கூட்டிட்டு வரப் போறேன்" என சொல்கிறார் ஈஸ்வரி.
அதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைய " நீங்க அவரை பார்க்க வேண்டாம் என சொல்லவில்லை. ஆனால் அவர் இந்த வீட்டில் கால் எடுத்து வைக்குற அடுத்தும் நிமிஷம் நான் இந்த வீட்டில் இருந்து வெளியே போய்விடுவேன். நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கெடுக்க வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்து இருக்கிறார்" என பாக்கியா சொல்ல, "நான் ஒன்னும் உன்னை பார்த்துக்க சொல்லலையே. நீ பெத்த பிள்ளைங்களுக்கு ஏதாவது ஒண்ணுன்னா பதற மாட்டியா? நான் நிச்சயமா கோபியை இங்கே கூட்டிட்டு தான் வர போகிறேன்" என சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
ராதிகாவும் அவளுடைய அம்மாவும் கோபியை பயங்கரமாக திட்டிக் கொண்டு இருக்கிறார்கள். "நேத்து உங்க அம்மா அந்த பேச்சு பேசும் போது ராதிகா என்னை நல்லா தான் பாத்துக்குறா என ஒரு வார்த்தை கூட சொல்லல. நான் மயூவையும் பாத்துக்கணும், உங்களையும் பாத்துக்கணும், வீட்ல எல்லா வேலையையும் செய்யணும், வேலைக்கும் போய் சம்பாதிச்சுட்டு வந்து கொடுக்கணும்.
எல்லாத்தையும் நான் பொறுப்பா தானே பார்த்துக்குறேன்" என ராதிகா சொல்ல "நானும் வீட்டு செலவு எல்லாத்தையும் தானே பாத்துக்குறேன்" என கோபி சொன்னதும் "சரி நான் இனிமேல் வேலைக்கு போகலை நீங்களே கரெண்ட் பில், லோன் எல்லாத்தையும் கட்டுங்க" என மாறி மாறி அம்மாவும் பொண்ணும் கோபியை திட்டி தீர்க்கிறார்கள்.
அந்த நேரம் பார்த்து ஈஸ்வரி வீட்டுக்கு வர கோபியும் ராதிகாவும் அதிர்ச்சி அடைகிறார்கள். "அவனுக்கு உடம்பு சரியில்லாம இருக்கும் போதே நீ அவனை இவ்வளவு பேச்சு பேசுற, அப்போ நல்லா இருக்கும் போது எவ்வளவு பேசி இருப்ப. வா கோபி நாம வீட்டுக்கு போகலாம்" என ஈஸ்வரி கோபியை கூப்பிட, ராதிகாவும் அவளுடைய அம்மாவும் ஷாக்காகிறார்கள். கோபியும் எவ்வளவு புரிய வைக்க முயற்சி செய்தாலும் ஈஸ்வரி விடாப்பிடியாக சொன்னதையே சொல்லி கொண்டு இருக்கிறார். ராதிகா கோபியை பார்த்து முறைக்கிறாள்.
பாக்கியாவுக்கு அனைவரும் ஆறுதல் கூறுகிறார்கள். "இவ போய் கூப்பிட்டாலும் அவன் வரமாட்டான்" என ராமமூர்த்தி சொல்கிறார். ஜெனியும் அமிர்தாவும் கூட கோபி அங்கே வரமாட்டார் என்று தான் சொல்கிறார்கள். அப்போது ஈஸ்வரி வீட்டு வாசலில் வந்து தனியாக நிற்க ராமமூர்த்தி ஈஸ்வரியை பார்த்து சிரிக்கிறார். பின்னர் ஈஸ்வரி கோபியை வீட்டுக்குள் அழைத்து செல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.