Ethirneechal serial : திரும்பவும் தர்ஷினியை காணவில்லையா? பதற்றத்தில் ஈஸ்வரி.. தொடரும் பரபரப்பு
Ethirneechal serial : சித்தார்த்தை காணவில்லை என்றாலும் நிச்சயதார்த்த ஏற்பாடுகளை குணசேகரன் மும்மரமாக செய்கிறார் என்றால் அதற்கு பின்னால் பெரிய பிளான் இருக்கிறது என என்பது கொற்றவையின் கணிப்பு
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியலின் இன்றைய (ஏப்ரல் 18) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ஈஸ்வரி தர்ஷினி நிச்சயதார்த்தம் விஷயமாக ஸ்பெஷல் ஆபீஸர் கொற்றவையை சென்று சந்தித்து பேசுகிறாள். "சித்தார்த் என்கிற பையனையும் காணும்னு சொல்றீங்க. ஆனாலும் குணசேகரன் டீம் தைரியமா இருக்காங்கன்னா பெரிய பிளானோட இருக்காங்கனு தானே அர்த்தம்" என கொற்றவை சொல்ல அதை கேட்டு ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறாள்.
கல்யாணத்துக்கு தேவையான ஏற்பாடுகளை அனைவரும் சேர்ந்து செய்ய, நந்தினியும் கதிரும் அது சம்பந்தமாக வெளியில் செல்வதை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது "அவர் சக்தியையும் கதிர் மாமாவையும் தான் போலீஸ் கிட்ட தேட சொல்லி இருக்கார்" என ஜனனி சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
வீட்டுக்கு வந்த ஈஸ்வரி தர்ஷினியை வீடு முழுக்க தேடுகிறாள். ஆனால் தர்ஷினியை எங்குமே காணவில்லை. ஐஸ்வர்யா மற்றும் தாராவிடம் சென்று ஈஸ்வரி கேட்க, அவர்களும் தெரியல பெரியம்மா என சொல்ல ஈஸ்வரி பதற்றமடைகிறாள். வேகவேகமாக விசாலாட்சி அம்மாவிடம் சென்று "எங்க கூட்டிட்டு போனாங்க தர்ஷினிய" என கேட்க இருவருக்கும் இடையில் சண்டை வருகிறது. இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
நேற்றைய எபிசோடில் ஞானமும் வீட்டில் இல்லை என்பதால் அவனுக்கும் இந்த பிளானில் சம்பந்தம் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அவனையும் கைது செய்ய சொல்லி போலீசிடம் சொல்கிறார் குணசேகரன். சித்தார்த்தை மிரட்டி "என்னிடம் இருந்து உன்னால் தப்பிக்க முடியாது. நேத்து காதலிப்ப இன்னிக்கு வேணாம்னு போவியா. தப்பிக்கணும்னு நினைச்ச காலி பண்ணிடுவேன்" என கதிர் மிரட்டுகிறான். அதற்குள் அஞ்சனாவும் ஜனனியும் மற்றவர்களும் கதிர் சக்தி இருக்கும் இடத்திற்கு வந்துவிடுகிறார்கள். வந்ததும் அஞ்சனா சித்தார்த்தை போய் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்குகிறாள். அவளை சக்தியும் கதிரும் சமாதானப்படுத்தி அழைத்து வருகிறார்கள்.
"நாம எல்லாரும் சேர்ந்து இங்க ஒண்ணா இருக்கோம்னு தெரிஞ்சா அவர் ஏதாவது செய்வார்" என ஞானம் குணசேகரனை நினைத்து பேச, "அவருக்காக எல்லாம் இங்க பயந்துகிட்டு இருக்க முடியாது. இந்த கல்யாணத்தை முடிச்சே ஆகணும்" என கதிர் சொல்கிறான். "எவ்வளவு அடிச்சாலும் வாங்கிகிட்டு நிக்குறான். அவன் எந்த மாதிரி பையனாக இருப்பான்னு தெரியல. நீ அவன தான் கல்யாணம் பண்ணிக்கணுமா?" என சக்தி அஞ்சனாவிடம் கேட்க "ஆமா நான் கல்யாணம் பண்ணனும். அந்த திமிரு புடிச்ச குடும்பத்தை அடக்கணும். எங்கப்பாவுக்கு ஒரு பாடம் கத்துக் கொடுக்கணும். எல்லாரையும் அசிங்க படுத்துற குணசேகரனுக்கு ஒரு பாடமா இருக்கணும்" என அஞ்சனா சொல்கிறாள். அனைவரும் சேர்த்து அஞ்சனா சொல்வது சரி தான் அவர்களுக்கு கல்யாணம் செய்து வைக்கலாம் என முடிவு எடுக்கிறார்கள்.
குணசேகரன் வீட்டுக்கு குணசேகரனின் மாமா சாமியாடி வருகிறார். ஈஸ்வரியிடம் இந்த கல்யாணத்தை நடத்தி வைப்பது பற்றி ஈஸ்வரியின் விருப்பம் கேட்கிறார். ஈஸ்வரி அவரிடம் "இதை பற்றி பேச வேண்டாம். என்னோட பொண்ணோட லட்சியம் தான் முக்கியம். அவளோட முடிவு தான் முக்கியம்" என்கிறாள். இந்த நிச்சயத்தை நடத்த விட மாட்டேன் என ஈஸ்வரி சவால்விட விசாலாட்சி ஈஸ்வரியை திட்டுகிறார். பதிலுக்கு மாமியாருக்கு சரியான பதிலடி கொடுக்கிறாள் ஈஸ்வரி. அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) முடிவுக்கு வந்தது.