மேலும் அறிய
Advertisement
Ethirneechal Serial: குணசேகரன் மூக்கை உடைக்க அஞ்சனா எடுத்த முடிவு.. சித்தார்த் கல்யாணம் நடக்குமா? எதிர்நீச்சல் அப்டேட்!
Ethirneechal serial: குணசேகரனை எதிர்க்க இந்தக் கல்யாணம் நடந்தே ஆக வேண்டும் என உறுதியாக அஞ்சனா இருக்க, அவளுக்கு சப்போர்ட்டாக அனைவரும் இருக்கிறார்கள். குணசேகரன் அடுத்த திட்டம் என்ன? எதிர்நீச்சலில் இன்று
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் இன்றைய (ஏப்ரல் 17) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சித்தார்த் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் இடத்துக்கு ஜனனியும் மற்றவர்களும் வந்து சேர்க்கிறார்கள். அஞ்சனா சித்தார்த்தை பார்த்ததும் ஆத்திரத்தில் அவனுடைய சட்டையைப் பிடித்து சரமாரியாக கேள்விகளை கேட்கிறாள். அனைவரும் அஞ்சனா - சித்தார்த் திருமணம் பற்றி பேசிக்கொண்டு இருக்கையில் "இந்த விஷயம் மட்டும் அண்ணனுக்கு தெரிஞ்சுதுனா அவர் சும்மா இருக்க மாட்டார்" என ஞானம் சொல்ல, "இங்க எல்லாம் அவரைப் பத்தி யோசிச்சுகிட்டு இருக்க முடியாது" என கதிர் ஆவேசமாகப் பேச அனைவரும் இது குறித்து தீவிரமாக யோசிக்கிறார்கள்.
குணசேகரன் வீட்டில் வாக்குவாதம் ஏற்பட "நீயும் உன்னோட பிள்ளைகளும் ஆடுற ஆட்டத்துக்கு சும்மா இருக்கணும் அப்படித்தானே" என ஈஸ்வரியைப் பார்த்து ஆத்திரப்படுகிறார் விசாலாட்சி அம்மா. "உங்க பிள்ளைக்கு வரிஞ்சு கட்டிக்கிட்டு வந்து சப்போர்ட் பண்றீங்க. நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா?" என விசாலாட்சியை ரைட் அண்ட் லெஃப்ட் வாங்குகிறாள் ஈஸ்வரி.
"உங்க எல்லாரையும் ரொம்ப கேவலமா நினைக்குறாருல்ல அந்த குணசேகரன், அவருக்கு இந்தக் கல்யாணம் பெரிய அடியாக இருக்கணும். அதுக்கு இந்தக் கல்யாணம் நிச்சயமா நடக்க வேண்டும்" என்கிறாள் அஞ்சனா. அனைவரும் அதை ஏற்று கொள்கிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
நேற்றைய எதிர்நீச்சல் எபிசோடில் சித்தார்த் கிடைத்தும் அவனை தப்பிக்கவிட்ட ராமசாமியையும் கிருஷ்ணசாமியையும் குணசேகரன் பயங்கரமாகத் திட்டுகிறார். கரிகாலனை சாட்சியாக வைத்து போட்டோ ஆதாரத்தைக் காட்டி கதிர் மற்றும் சக்தி மீது போலீசில் புகார் கொடுக்க சொல்கிறார்.
கதிருக்கு நந்தினி போன் செய்ய அவளிடம் சித்தார்த் அவர்களுடன் இருக்கும் விஷயத்தை சொல்கிறான். "நாளைக்கு காலையில ஒரு கோயிலை வைச்சு அஞ்சனாவுக்கும் சித்தார்த்துக்கும் கல்யாணம் செய்து வைத்து விடலாம். நான் அந்த இடத்துக்கு போன உடனே உங்களுக்கு லொகேஷன் அனுப்பிகிறேன். நீங்க அனைவரும் அங்கே வந்து சேர்ந்துடுங்க. இந்த விஷயம் வேற யாருக்கும் தெரியாம பார்த்துக்கோங்க" என சொல்லி ஷாக் கொடுக்கிறான்.
நந்தினி வேகமாகச் சென்று கதிர் சொன்ன தகவல் சொல்ல, அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள். குணசேகரன் கண்ணில் எப்படி மண்ணை தூவிவிட்டு போவது என யோசனை செய்ய, ஜனனி பத்திரிகைகாரர்களுக்கு போன் செய்து வர வைக்கிறாள். அவர்கள் வந்து குணசேகரனிடம் தர்ஷினி திருமணம் பற்றி லைவில் கேட்க, பதட்டமான குணசேகரன் அவர்களை வெளியே விரட்டிவிடுகிறார். அந்த நேரம் பார்த்து ஜனனியும் மற்றவர்களும் எஸ்கேப்பாகி விடுகிறார்கள்.
இன்ஸ்பெக்டர் போன் செய்து ஞானத்திடம் கதிர் பற்றியும் சக்தி பற்றியும் விசாரிக்க சொல்கிறார். அதற்காக குணசேகரன் ஞானத்தை தேடுகிறார். ஞானம் இல்லாததால் அங்கிருந்த ஈஸ்வரியிடம் கேட்க "நீங்க கேட்ட கேள்விக்கு எல்லாம் நாம பதில் சொல்ல வேண்டிய எந்த அவசியமும் இல்லை. சொல்லவும் முடியாது" எனக் கண்டிப்பாக சொல்லிவிடுகிறாள் ஈஸ்வரி. இது தான் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் கதைக்களம்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion