Ethirneechal : குணசேகரனுடன் கூட்டணி சேர்ந்த கிருஷ்ணா.. ஜனனிக்கு காத்திருக்கும் சவால்.. எதிர்நீச்சலில் இன்று!
Ethirneechal Dec 9 : ஜனனியை மிரட்ட வந்த கிருஷ்ணாவை உள்ளே அழைத்து உபசரித்த குணசேகரன், ஜனனியை அனைவர் முன்னிலையிலும் அசிங்கப்படுத்துகிறார். எதிர்நீச்சலில் இன்று என்ன நடக்கிறது?
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ஈஸ்வரியை சேர்மன் எலெக்ஷனில் இருந்து வாபஸ் வாங்க சொல்லி குணசேகரன் வற்புறுத்த, அதற்கு சரியான பதிலடி கொடுக்கிறாள் ஜனனி. குணசேகரன், ஈஸ்வரியிடம் தோற்று விடுவோம் என நினைத்து வாபஸ் வாங்க சொல்வதாக சொல்லி கைப்பட எழுதி கையெழுத்து போடுவதென்றால் ஈஸ்வரியை வாபஸ் வாங்க சொல்வதாக ஜனனி சொல்ல, அதைக் கேட்டு கடுப்பாகிறார் குணசேகரன்.
நந்தினிக்கு சமையல் ஆர்டர் ஒன்று வருகிறது. வெப்சைட் மூலம் ஆர்டர் கொடுப்பவர்கள் வீட்டுக்குச் சென்று சமைத்துக் கொடுத்து அதற்கான சார்ஜ் பெற்றுக்கொள்ளலாம் என ஜனனி சொல்ல, நந்தினி சந்தோஷமடைகிறாள்.
ஜனனியும் சக்தியும் சேர்ந்து நடத்துவதாக இருந்து பேக்டரியை அவர்களுக்கு சேரவிடாமல் பிரச்சினை கொடுத்த கதாபாத்திரமாக கிருஷ்ணன் மெய்யப்பன் என்ற கேரக்டர் என்ட்ரியானது. கிருஷ்ணாவின் சித்தப்பா மகள் தான் ஜனனி என்பது அவர்கள் இருவருக்குமே தெரியாது. சிறிது மாதங்களாக கிருஷ்ணா பற்றின காட்சிகள் வராமல் இருந்தன. இந்நிலையில் மீண்டும் கிருஷ்ணாவின் காட்சிகள் வர தொடங்கியுள்ளன.
ஏற்கனவே ஜனனிக்கும் சக்திக்கும் பேக்டரியை விட்டு விலக சொல்லி வார்னிங் கொடுத்ததும் அவர்கள் விலகுவதாக இல்லை என சொல்லி வீட்டுக்கே வந்த கிருஷ்ணன் மிரட்ட, அதை பார்த்த குணசேகரன் என்ன செய்ய போகிறார் என்பதுடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
நந்தினி ஆர்டர் கொடுத்தவர்களின் வீட்டுக்குச் சென்று சமைக்கிறாள். அந்த நேரத்தில் அவர்களின் வீட்டுக்கு நந்தினியின் அப்பா விருந்தாளியாக வருகிறார். சமையலுக்கு ஆள் தேவை பற்றி அவர்கள் பேசுகையில் வீடு வேலைக்கு புது ஆள் ஒருவரை வைத்துவிட்டோம் என சொல்லி நந்தினியை அழைக்க அவளைப் பார்த்து நந்தினியின் அப்பா அதிர்ச்சி அடைகிறார்.
குணசேகரன் கிருஷ்ணாவை வீட்டுக்குள் அழைத்து வைத்து உபசரிக்கிறார். அதைப் பார்த்து கடுப்பான ஜனனி "உங்களுக்கும் எங்களுக்கும் இருப்பது பிசினஸ் பிரச்சினை. இதை வீட்டில் வைத்து பேசவேண்டிய அவசியம் இல்லை. முதலில் இங்கிருந்து கிளம்புங்க" என விரட்டுகிறாள் ஜனனி. அதை பார்த்த குணசேகரன் "நீ யாரு வெளியே போக சொல்றதுக்கு? நாலு புடவையை கக்கத்துல வைச்சுக்கிட்டு வந்தவ நீ... எவ்வளவு பெரிய வீடு பிள்ளையை வெளிய போக சொல்லுற..." என அனைவர் முன்னிலையிலும் ஜனனியை அசிங்கப்படுத்துகிறார் குணசேகரன். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
சமீப காலமாக பெண்கள் எடுத்து வைக்கும் அனைத்து அடியிலும் தொடர்ந்து சரிந்து வந்ததால் எதிர்நீச்சல் சீரியல் பெரிய அளவுக்கு விறுவிறுப்பு இல்லாமல் இருந்தது. ஏற்கனவே ஜனனிக்கு எதிராக செயல்படும் குணசேகரனுடன் சேர்ந்து அடுத்த எதிரியாக கிருஷ்ணாவும் களமிறங்கி உள்ளதால் எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியல் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.