மேலும் அறிய

Ethirneechal: போலீசிடம் பல்டி அடித்த ஆதிரை.. அவமானப்பட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஈஸ்வரி.. எதிர்நீச்சல் இன்று!

Ethirneechal : போலீசிடம் குணசேகரனுடன் போக விருப்பமில்லை என தைரியமாக சொன்ன ஆதிரை. ஜான்சிக்கும் கரிகாலனுக்கும் குணசேகரன் கொடுக்கும் வாக்கால் அதிர்ச்சியான ஈஸ்வரி. இன்றைய எதிர்நீச்சல் ப்ரோமோ!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் எஸ்.கே.ஆர் வீட்டுக்குச் சென்று பிரச்சினை செய்வதற்காக தம்பிகள் மற்றும் கரிகாலனையும் அழைத்துக் கொண்டு செல்கிறார் குணசேகரன். அந்த சமயத்தில் ஆதிரை எஸ்.கே.ஆர் வீட்டுக்கு பெட்டி படுக்கையுடன் வந்து இறங்க, அவளைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

Ethirneechal: போலீசிடம் பல்டி அடித்த ஆதிரை.. அவமானப்பட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஈஸ்வரி.. எதிர்நீச்சல் இன்று!

அருண் ஆக்சிடென்ட் ஆனதற்கு காரணம் குணசேகரன் தான் என உண்மையை எஸ்.கே.ஆரிடம் போட்டு உடைகிறாள் ஆதிரை. இந்த வீட்டில் இடமில்லை என எஸ்.கே.ஆர் ஆதிரையை விரட்டினாலும், சாருபாலா ஆதிரைக்கு ஆதரவாக பேசுகிறார். அந்த நேரத்தில் கரிகாலன் வந்து குணசேகரனுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்க, பளார் என ஆதிரையிடம் அறை வாங்குகிறான்.  அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.

Ethirneechal: போலீசிடம் பல்டி அடித்த ஆதிரை.. அவமானப்பட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஈஸ்வரி.. எதிர்நீச்சல் இன்று!

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

எஸ்.கே.ஆர் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ள ஆதிரையை தரதரவென இழுத்து வருகிறான் ஞானம். ஆதிரையை கொலை வெறியுடன் பார்த்துக் கொண்டு இருக்கிறார் குணசேகரன். அந்த நேரத்தில் போலீஸ் வந்து ஞானத்தை கேள்வி கேட்க "இது எங்க வீட்டு பொண்ணு... எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய்கிட்டு இருக்கோம். போய் வேலையே பாருங்க" என போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் திமிராக பேசுகிறான் ஞானம். அதை சாருபாலா, அரசு மற்றும் எஸ்.கே.ஆர் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.  

Ethirneechal: போலீசிடம் பல்டி அடித்த ஆதிரை.. அவமானப்பட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஈஸ்வரி.. எதிர்நீச்சல் இன்று!
"எனக்கு இவங்க கூட போக விருப்பம் இல்ல சார்" என ஆதிரை பல்டி அடிக்க, ஒன்னும் புரியாமல் நிற்கிறார் குணசேகரன். ஆதிரையிடம் கோபத்தைக் காட்டிய ஞானத்தை தடுக்கிறான் சக்தி. வீட்டுக்கு திரும்புகிறார்கள் குணசேகரன் மற்றும் அவரது தம்பிகள். வீட்டுக்கு வந்து எஸ்.கே. ஆர் வீட்டில் நடந்ததை பற்றி அனைவரிடத்திலும் சொல்ல கடுப்பான ஜான்சி ராணி, மகன் கரிகாலனை அழைத்துச் சென்று வீட்டு வாசலில் தலைமுழுகி தர்ணா செய்கிறாள். அவர்களிடம் சென்ற குணசேகரன் "இப்போ சொல்றேன். உனக்கு நடந்த தப்புக்கு நான் பரிகாரம் செய்கிறேன்" என எதையோ சொல்ல, அதைக் கேட்டு ஈஸ்வரியும் மற்றவர்களும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

ஜனனி விசாலாட்சி அம்மாவிடம் "அருணை ஆக்சிடென்ட் பண்ணி காலை உடைச்சது உங்க பிள்ளை. உங்க மாமியாரை கொன்றவருக்கு நீங்க என்ன தண்டனை கொடுக்க போறீங்க" என ஆவேசமாகப் பேச விசாலாட்சி அம்மா ஜனனியை அடிக்க கை ஓங்குகிறார். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.

ஆதிரை என்ற கதாபாத்திரத்தை இப்போது தான் சரியாக பயன்படுத்துகிறார் இயக்குநர். ஆதிரை செய்த தப்புக்காக கரிகாலனுக்கு தன்னுடைய மகள் தர்ஷினியை கல்யாணம் செய்து வைப்பதாக சொல்வார் குணசேகரன் என்பது அனைவரின் யூகமாக இருக்கிறது. இத்தனை நாட்கள் முடங்கி இருந்த ஈஸ்வரி, தற்போது தான் தைரியத்துடன் துணிச்சலாக அவர்களை எதிர்கொண்டு வருகிறாள். அப்படி இருக்கையில் மகளை எப்படி பலி கொடுப்பாள்? நிச்சயம் குணசேகரனின் இந்த திட்டத்தை முறியடிப்பாள் ஈஸ்வரி.

மீண்டும் ஒவ்வொரு நாளும் பரபரப்பு குறையாமல் எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியல் மேலே உயர்ந்து வருவது சின்னத்திரை ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.  
  
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Oscars 2025: 22 வருடங்களுக்குப்பின் நடிகரை பழிவாங்கிய நடிகை.. ஆஸ்கர் ரெட் கார்பெட்டில் சுவாரஸ்யம்
22 வருடங்களுக்குப்பின் நடிகரை பழிவாங்கிய நடிகை.. ஆஸ்கர் ரெட் கார்பெட்டில் சுவாரஸ்யம்
Oscars 2025 Winners: ஆஸ்கர் விருது வென்றவர்களின் முழு பட்டியல் இதோ
Oscars 2025 Winners: ஆஸ்கர் விருது வென்றவர்களின் முழு பட்டியல் இதோ
Oscars 2025 LIVE: தொடங்கியது 97-வது ஆஸ்கர் விழா! அதிக விருதுகளை தட்டிச்செல்லப்போவது யார்? முழு விவரம்
Oscars 2025 LIVE: தொடங்கியது 97-வது ஆஸ்கர் விழா! அதிக விருதுகளை தட்டிச்செல்லப்போவது யார்? முழு விவரம்
"ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா முழுவதும் காட்டுத்தீயா பரவி இருக்கு" கொதிக்கும் உதயநிதி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth | ”தலைவர் அரசியலுக்கு வருவார்? 2026ல்  நிச்சயம் நடக்கும்” ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்NEET Suicide | NEET தேர்வு பயம் மாணவி தூக்கிட்டு தற்கொலை விழுப்புரத்தில் பரபரப்பு..! | Villupuramதேசிய அரசியலில் விஜய்! மோடி, நிதிஷ்-க்கு ஸ்கெட்ச்! பிரசாந்த் கிஷோரின் மூவ்Kaliyammal DMK | எகிறிய டிமாண்ட்!குழப்பத்தில் காளியம்மாள்!தவெகவா? திமுகவா? அதிமுகவா? | MK Stalin | TVK | ADMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Oscars 2025: 22 வருடங்களுக்குப்பின் நடிகரை பழிவாங்கிய நடிகை.. ஆஸ்கர் ரெட் கார்பெட்டில் சுவாரஸ்யம்
22 வருடங்களுக்குப்பின் நடிகரை பழிவாங்கிய நடிகை.. ஆஸ்கர் ரெட் கார்பெட்டில் சுவாரஸ்யம்
Oscars 2025 Winners: ஆஸ்கர் விருது வென்றவர்களின் முழு பட்டியல் இதோ
Oscars 2025 Winners: ஆஸ்கர் விருது வென்றவர்களின் முழு பட்டியல் இதோ
Oscars 2025 LIVE: தொடங்கியது 97-வது ஆஸ்கர் விழா! அதிக விருதுகளை தட்டிச்செல்லப்போவது யார்? முழு விவரம்
Oscars 2025 LIVE: தொடங்கியது 97-வது ஆஸ்கர் விழா! அதிக விருதுகளை தட்டிச்செல்லப்போவது யார்? முழு விவரம்
"ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா முழுவதும் காட்டுத்தீயா பரவி இருக்கு" கொதிக்கும் உதயநிதி!
"எம்பி பதவியும் இல்ல.. அமைச்சர் பதவியும் இல்ல" நாம் தமிழரில் இருந்து விலகிய காளியம்மாளின் முதல் பேட்டி!
IND vs NZ: தமிழனின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து..  இந்தியா சூப்பர் வெற்றி! அரையிறுதியில் யாருடன் மோதல்?
IND vs NZ: தமிழனின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து.. இந்தியா சூப்பர் வெற்றி! அரையிறுதியில் யாருடன் மோதல்?
CUET Exam 2025: கியூட் தேர்வுத் தேதி அட்டவணை வெளியீடு.! கடைசி தேதி எப்போது? தேர்வு எப்போது?
கியூட் தேர்வுத் தேதி அட்டவணையை வெளியீடு.! கடைசி தேதி எப்போது? தேர்வு எப்போது?
2 முதலமைச்சர்களை கொடுத்தது தேனி.! நேக்கா ஓபிஎஸ்-ஐ கழட்டிய இபிஎஸ்.! 3 முதல்வர்தானே.!
2 முதலமைச்சர்களை கொடுத்தது தேனி.! நேக்கா ஓபிஎஸ்-ஐ கழட்டிய இபிஎஸ்.! 3 முதல்வர்தானே.!
Embed widget