Ethir neechal August 28 promo: குணசேகரனுக்கு ஆப்பு வைக்க காத்திருக்கும் வீட்டு பெண்கள் .. எதிர்நீச்சலில் இன்று நடப்பது என்ன?
அப்பத்தாவிடம் சென்று சொத்தை கேட்டு வாங்குவதற்காக மருமகள்கள் அனைவரும் செல்கிறார்கள். ஜீவானந்தம் பற்றிய உண்மையை மற்றவர்களிடம் சொல்லி வருத்தப்படும் ஈஸ்வரி. இன்றைய எதிர் நீச்சலில் என்ன நடக்கிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடர் தொடர்ந்து டி.ஆர்.பி ரேட்டிங் வரிசையில் முன்னணியில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான ட்விஸ்ட் என பரபரப்பாக நகரும் கதைக்களம் மற்றும் நடிகர்களின் யதார்த்தமான நடிப்பு.
இத்தனை நாட்களாக கோமாவில் படுத்த படுக்கையாக இருந்த பட்டம்மாள் கடந்த வாரம் கண்முழித்ததில் இருந்து எபிசோட் அடுத்த லெவல் பரபரப்பை எட்டியுள்ளது. அவர் ஏன் சொத்தை ஜீவானந்தம் பெயரில் எழுதி கொடுத்தார் என்ற விஷயம் இன்னும் சஸ்பென்ஸாகவே இருந்து வருகிறது.
அப்பத்தாவை மிரட்டி ஜீவானந்தத்திற்கு எதிராக வாக்குமூலம் வாங்கிய குணசேகரனுக்கு சரியான பதிலடியை கொடுத்தார் பட்டம்மாள். ரூமில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த பட்டம்மாள் எப்படியோ அங்கு இருந்து தப்பித்து நீதிபதியை நேரடியாக சந்தித்து நடந்த அத்தனை விஷயங்களை பற்றி சொல்லி ஜீவானந்தத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட வாக்குமூலத்தை ரத்துசெய்ய வைத்து கெத்து காண்பித்தார்.
வீட்டில் இருக்கும் அனைவருக்கும் ஜீவானந்தம் மனைவியை கொன்றது யார் என்பது தெரிந்து அனைவரும் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறார்கள். அந்த வெறுப்பை நேரடியாகவே அவர்களிடத்தில் காட்ட துவங்கிவிட்டனர். நேற்றைய எபிசோடில் ரேணுகா "நீங்க எல்லாத்துக்கும் துணிஞ்சவங்க தானே" என உலர அதை சுதாரித்து கொண்ட ஜனனி கண்ணை காண்பித்து ரேணுகாவை அடக்கிவிட்டார்.
சைலெண்டாக இருந்து குணசேகரனுக்கு எதிராக காரியத்தை சாதிக்க தயாராகிவிட்டாள் ஜனனி. ஜீவானந்தம் மனைவியை கொன்றது இவர்கள் தான் என்பதற்கு தகுந்த ஆதாரங்களை சேகரித்த பிறகு ஜனனியின் ஆட்டம் துவங்கும்.
அந்த வகையில் இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
அனைவரும் ஒன்றாக இருக்கும் நேரத்தில் நந்தினி குணசேகரனிடம் நியாயம் கேட்க கதிர் பேயறைந்த மாதிரி இருக்கிறான். நந்தினியிடம் குணசேகரன் " சும்மா தேவையில்லாம இங்க பேசிகிட்டு நிக்காம போய் அந்த கிழவியை பார்த்து சொத்தை வாங்கிட்டு வர வழியை பாருங்க" என்கிறார்.
நந்தினி, ஈஸ்வரி, ரேணுகா மற்றும் ஜனனி நால்வரும் ஒரு பொது இடத்தில் நின்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஈஸ்வரி தன்னுடைய இளம் வயதில் ஒருவர் மீது ஏற்பட்ட ஈர்ப்பு பற்றியும் அதற்கு பிறகு நடந்த விஷயங்களை பற்றியும் அவர்களிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறாள். தனது அப்பா ஊருக்கு சென்ற போது ஜீவானந்தத்தை சந்தித்தது குறித்தும் சொல்கிறாள். அப்போது "ஜீவானந்தத்தோட வாழ்க்கையில இப்படி ஒரு கொடூரம் நடக்கும், அதுவும் என் சம்பந்தப்பட்ட ஒரு ஆளாலே நடக்குன்னு சத்தியமா நான் எதிர்பார்க்கவே இல்லை" என வருத்தப்படுகிறாள் ஈஸ்வரி. அதை கேட்ட அனைவரும் சங்கடப்படுகிறாள். இது தான் இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
அப்பத்தாவை சென்று சந்தித்தால் என்ன நடக்கப்போகிறது. அப்பத்தா இவர்கள் பேச்சை கேட்பாரா? குணசேகரன் என்ன திட்டம் வைத்து இருக்கிறார். ஜனனி எப்படி ஆதாரங்களை சேகரிக்க போகிறாள்? இனி வரும் எதிர் நீச்சலல் (Ethir neechal) எபிசோட்களில் இதற்கான விடை கிடைக்கும்.