மேலும் அறிய
Siragadikka Aasai: ரோகிணி மீது ரவிக்கு வந்த சந்தேகம்... கிரிஷ்ஷை பார்த்து விஜயா செய்த காரியம்... சிறகடிக்க ஆசை அப்டேட்
Siragadikka Aasai Serial Today Jun.06: விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.
Siragadikka Aasai Written Update: 'சிறகடிக்க ஆசை' இன்றைய (ஜூன் 6) எபிசோடில் மீனா கிரிஷிடம் பேசி கொண்டு இருக்கும்போது நாளை கட்டை அவிழ்த்ததும் நீ உன்னோட பாட்டி, ப்ரெண்ட்ஸ் எல்லாரையும் பார்க்கலாம் என சொன்னதும், “அப்போ நான் என்னோட அம்மாவையும் பார்ப்பேன்” என கிரிஷ் சொல்ல, மீனா அதிர்ச்சி அடைகிறாள்.
ரோகிணியின் அம்மா எதையோ சொல்லி மீனாவை சமாளித்து விடுகிறார். துபாயில் இருக்கும் கிரிஷுடைய அத்தை பற்றி மீனா விசாரிக்க, அவளை திசை திருப்புவதற்காக ரோகிணி பால் பாத்திரத்தை வேண்டுமென்றே தட்டிவிடுகிறாள். அப்போது ரவியும் ஸ்ருதியும் வர ரவி ரோகினி செய்ததை பார்த்து விடுகிறான்.
ரவி ஸ்ருதியிடம் ரோகிணி செய்த காரியத்தைப் பற்றி சொன்னதும், உடனே நான் இதை ரோகிணியிடமே கேட்கிறேன் என உடனே நேரடியாக சென்று கேட்கிறாள் ஸ்ருதி. உங்களுக்கு அந்தப் பாட்டியும் பையனும் இந்த வீட்டில இருக்கிறது பிடிக்கலையா? அதை நீங்கள் வெளிப்படையாகவே சொல்லலாம். அதற்கு உங்களுக்கு உரிமை இருக்கு என ஸ்ருதி சொல்ல சொல்ல, ரோகிணி “இதைப் பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம். இன்று ஒரு நாள் தானே இருந்துட்டு போகட்டும்” என்கிறாள் ரோகிணி. அதை முத்து கேட்டுவிடுகிறான். ஆனால் அவனையும் ரோகிணி சமாளிக்கிறாள்.
கோயிலுக்குச் சென்ற அண்ணாமலையும் விஜயாவும் வீட்டுக்கு வருகிறார்கள். அண்ணாமலை வேறு ஏதோ வேலையாக நான் சென்று வருகிறேன் என சொல்ல, விஜயா மட்டும் வீட்டுக்கு போகிறாள். அங்கே கிரிஷ் அவளுடைய சேரில் உட்கார்ந்து இருப்பதைப் பார்த்து பயங்கரமாக சத்தம் போடுகிறாள். கிரிஷை தரதரவென இழுத்து “இன்னும் இவர்கள் இங்கிருந்து கிளம்பவில்லையா?” என ரோகிணியிடம் சத்தம் போடுகிறாள். கிரிஷையும் அவனுடைய பாட்டியையும் வாய்க்கு வந்தபடி திட்டுகிறாள். அப்போது வந்த மனோஜூம் “சின்ன பையன்தானே விடுங்க அம்மா” என சொல்கிறான்.
விஜயா இப்படிப் பேசுவதை பார்த்து மீனா கிரிஷுக்கு சப்போர்ட்டாக பேசுகிறாள். அம்மா அப்பா வளர்த்தா ஒழுக்கமா வளர்த்து இருப்பாங்க, பாட்டி வளர்த்தா இப்படி தான் என முத்துவையும் சேர்த்து வைத்து அவமானப்படுத்தி பேசுகிறாள் விஜயா. பின்னர் விஜயா சென்றதும் மனோஜ் என்னால் வெளியில் படுத்து கொள்ள முடியவில்லை என விஜயாவிடம் சொல்ல, விஜயா அவளுடைய ரூமை விட்டு வெளியே வந்து விடுகிறாள்.
முத்துவுக்கு ரோகிணி மீது சந்தேகம் வருகிறது. அவளுக்கு குழந்தை ஆசை வந்து விட்டது அதனால் தான் கிரிஷுக்காக ரூமை விட்டு கொடுக்கிறாள், மனோஜிடம் சண்டை போடுகிறாள் என மீனாவிடம் சொல்கிறான். அதை ரோகிணியும் மனோஜும் கேட்டுவிடுகின்றனர். உடனே மனோஜ் ரோகிணியை ஆசையாய் நெருங்க, ரோகிணி அவனைத் திட்டி அனுப்பிவிடுகிறாள். ரோகிணி ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் என்பது புரியாமல் குழம்புகிறான் மனோஜ். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion