Siragadikka Aasai: முத்துவை தொடரும் பிரச்சினை...விஜயாவுக்கு விழுந்த அடி..சிறகடிக்க ஆசையில் இன்று !
சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.
நேற்றைய எபிசோடில் விஜயா மீனாவிடம் வேலை செய்வதை முத்து பார்த்து டென்ஷானாகும் காட்சிகளோடு சீரியல் முடிந்தது. இன்றைய எபிசோடில் ”சும்மா எல்லா வேலையும் அவக்கிட்டியே சொல்லிக்கிட்டு இருக்கிங்க. கடையிலயும் வேலை பார்த்துட்டு இங்கேயும் வேலை செய்யுறா” என முத்து விஜயாவிடம் சொல்கிறார். ”ஏன் அத்தை கிட்ட இப்படி பேசிக்கிட்டு இருக்கிங்க” என்கிறார் மீனா.
”உனக்காக தானே பேசினேன்” என்கிறார் முத்து. ”அதுக்கும் சேர்த்து நான் தான் திட்டு வாங்கனும்” என்கிறார் மீனா. பின் மீனா வேலை இருப்பதாக சொல்லி விட்டு செல்கிறார். மீனா வரும் வரை முத்து தூங்காமல் மீனாவுக்காக காத்திருக்கிறார். பின் மீனாவுக்காக வாங்கி வந்த அல்வாவை கொடுத்து விட்டு மல்லிகைப்பூவை வைத்து விடுகிறார். ஸ்ருதியும் உள்ளே இருந்து வெளியே செல்கிறார். மீனா , ”இந்த நேரத்துல எங்க போறிங்க” என்று கேட்கிறார். ”மிட் நைட் பிரியாணி சாப்டனும்னு ஆசையா இருந்தது” என்று சொல்கிறார்.
”எதுவும் நடக்க விட மாட்டாங்க போல இருக்கே” என்று சொல்கிறார் முத்து. பின் விஜயாவும் ரூமுக்குள் இருந்து வெளியே வருகிறார். பின் மீனாவும் ஸ்ருதியும் சேர்ந்து பிரியாணி சாப்பிடுகின்றனர். ”இவங்க பிரியாணி சாப்புடுறதுக்கு நம்மல அல்வா சாப்பிட விடாம பண்ணிடுவாங்க போல” என மனதிற்குள் நினைக்கிறார் முத்து.
”நான் இந்த ஹோட்டல்ல அடிக்கடி சாப்பிடுவேன் ஆண்டி” என ஸ்ருதி சொல்கிறார். பின் விஜயா ரூமுக்குள் செல்கிறார். ”இந்த நேரத்துல பிரியாணி சாப்பிட்டா செரிக்குமா?” என அண்ணாமலை கேட்கிறார். அதெல்லாம் செரிக்கும் என விஜயா சொல்கிறார். பின் உண்ண உணவு செரிக்காததால் இரவு முழுவதும் ஹாலில் சுற்றி வருகிறார் விஜயா.
பின் விஜயாவுக்கு மூச்சுப் பிடித்துக் கொள்கிறது. இதனால் பார்வதி விஜயாவின் முதுகில் குத்தி விடுகிறார். குடும்பத்தில் உள்ள அனைவரும் சுற்றி உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். ”இதுக்கு தான் நைட் நேரத்துல கண்டதை எல்லாம் சாப்டாதனு சொன்னே” என்கிறார் அண்ணாமலை.
”கஷ்டமா இருக்கா?” என மனோஜ் கேட்கிறார். ”இல்ல ஜாலியா இருக்கு” என விஜயா கிண்டலாக பதில் சொல்கிறார். என்ன செய்தும் விஜயாவுக்கு சரியாகவில்லை. அப்போது பார்வதி ”இவ்ளோ குத்து குத்துறேன் இன்னுமா உனக்கு சரியாகல” என கேட்கிறார். பின் குத்தி விடுவதற்காக ரோகினியை கூப்பிடுகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க
Ajithkumar: பைக் ஓட்டுவோம்..பிரியாணி கிண்டுவோம்.. நடிகர் அஜித்குமாரின் வைரல் வீடியோ!
Pa Ranjith : கள்ளிப்பால்ல ஒரு டீ.. ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புது ஆந்தாலஜி